#3 ஜெ ரிச்சர்ட்சன்
ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது கிடைத்துள்ள சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் ஜெ ரிச்சர்ட்சன். சமீபத்தில் முடிந்த இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இவர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி மீண்டும் தமது பழைய நிலைக்கு திரும்பியதற்கு இவரது பந்துவீச்சும் ஒரு காரணமாகும். 3 போட்டிகளில் விளையாடிய இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தொடரில் ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெ ரிச்சர்ட்சன் பௌலிங் மட்டுமல்லாமல் டெல்லியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 21 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை எடுத்தார். இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடந்தது. அப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை1-0 என முன்னிலை பெற செய்தார்.
பிக்பேஸ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சஸ் அணிக்காக 5 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 6.47 எகானமி ரேட்டுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டால் லுங்கி நிகிடி-க்கு சரியான மாற்றுக்காராக இருப்பார்.
நிகடி விலகியுள்ளதால் சென்னை அணிக்கு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே தேவை. வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் என யாரும் தேவையில்லை. இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மூன்று பந்துவீச்சாளர்களுமே லுங்கி நிகிடிக்கு சிறந்த மாற்று வீரராக இருப்பர்.
மாற்று பந்துவீச்சாளரை அறிவிக்கும் வரை டேவிட் வில்லிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை வெளிபடுத்த இது ஒரு தகுந்த வாய்ப்பாக இவருக்கு இருக்கும். யாருக்கு தெரியும் டேவிட் வில்லி சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் பௌலராக கூட களமிறங்க வாய்ப்புள்ளது.