2019 ஐபிஎல் தொடர் பெங்களூரு அணிக்கு ஆரம்பம் முதலே படுமோசமாக அமைந்து வருகிறது. இந்தவருடத்தில் விளையாடிய போட்டிகளில் ஒரு போட்டியில் கூட பெங்களூரு வெற்றி பெறவில்லை. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தடுமாறி வரும் பெங்களூரு அணி புள்ளி அட்டவனையில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் அழிவு நெருங்கிவிட்டது போல ரசிகர்கள் எண்ணுகின்றனர்.
இவ்வருடத்தில் மிகவும் மோசமான முறையில் ஐபிஎல் தொடரை ஆரமித்துள்ள பெங்களூரு அணி வெல்ல கடினமாக உழைக்க வேண்டும். சில சிறப்பான வீரர்கள் இந்த அணியில் உள்ளனர். அவர்களுக்காக மிகவும் ரசிகர்கள் வருந்துகின்றனர். இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
நாம் இங்கு பெங்களூரு அணியில் ஆடும் XI-ல் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அந்த அணியின் மோசமான தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ம திறமை உடைய 3 வீரர்கள் பற்றி காண்போம்.
#1 டிம் சௌதி
தற்போது உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக டிம் சௌதி திகழ்கிறார். டெத் ஓவரில் இவரது பௌலிங் சிறப்பாக இருக்கும். அத்துடன் தனது பந்துவீச்சில் குறைவான ரன்களை அளித்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். இவர் ஆடும் XI-ல் சேர்க்காமல் பெங்களூரு அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தவறவிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சௌதி சிறப்பான ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். இதனாலேயே இவரை அணியில் சேர்க்கப்பட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். பெங்களூரு அணி டெத் ஓவரில் மோசமான முறையில் பந்துவீசி வருகிறது. இந்த குறையை நிரப்ப அனுபவ வீரர் டிம் சௌதி-யினால் மட்டுமே முடியும்.
#2 ஹய்ன்ரிச் கிளாசென்
ஹய்ன்ரிச் கிளாசென் கடந்த சில மாதங்களாக சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்குகிறார். இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டையும் சம அளவு எதிர்கொள்ளும் திறமை உடையவர்.
ஹய்ன்ரிச் கிளாசென் இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை முடித்து வைக்கும் திறமை உடையவர். அத்துடன் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டால் நிலைத்து விளையாடும் திறமை கொண்டவர்.இவர் இந்த அணியின் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாகவோ அல்லது விக்கெட் கீப்பராகவோ பெங்களூரு அணியில் களமிறக்கலாம்.
#3 வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் 2018 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்திறன் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. ஆனால் உள்ளுர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம்பிடித்து ஆடும் XI-லும் இடம்பெற்றுள்ளார்.
மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெங்களூரு அணியில் வாஷிங்டன் சுந்தர் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இவர் பவர் பிளே மற்றும் டெத் ஓவரில் சிறப்பான எகானமி ரேட் வைத்துள்ளார். பெங்களூரு அணிக்கு இவரது பங்களிப்பு கண்டிப்பாக தற்போது தேவைப்படுகிறது.
இவர் தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் தொடக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். சிறப்பான தொடக்க வீரர்கள் இன்றி தடுமாறி வரும் பெங்களூரு அணிக்கு இவர் சரியான தீர்வாக இருப்பார். சுந்தர் மிடில் ஆர்டரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை முடித்து வைக்கும் திறமை உடையவர். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அனைத்து ஆர்டரிலும் அசத்தும் வாஷிங்டன் சுந்தரை அணியில் இடம்பெற வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாகும்.