நடந்து முடிந்த பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் பல நிகழ்வுகளை அளித்துள்ளது. இவற்றில் குறிப்பிடும் வகையில், டேவிட் வார்னரின் அட்டகாசமான ரன்கள், வயதை கருதாமல் அமர்க்களப்படுத்திய இம்ரான் தாஹிர், கிறிஸ் கெய்ல், உலகத்தரமான டி20 பந்துவீச்சை பதிவு செய்த பும்ரா என பலவற்றை கண்டுள்ளோம். எட்டு அணிகளிலும் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூறிவிட முடியாது. அவற்றில், சில வீரர்கள் மிகுந்த ஏமாற்றத்தை நடப்பு ஐபிஎல் தொடரில் அளித்தனர். அவ்வாறு, மிகப்பெரிய ஏமாற்றம் அளித்த மூன்று வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#3.சிம்ரன் ஹெட்மேயர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக செயல்படுவார் என்று கருதி அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. பெரும் நம்பிக்கையை வைத்ததன் காரணமாக எனவோ, இவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. தொடரின் 5 போட்டிகளில் களம் இறங்கி வெறும் 90 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 18 என்ற அளவில் மோசமாக அமைந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் 75 ரன்களை குவித்தது இவரது தொடரின் சிறந்த ஆட்டமாக அமைந்தது. எனவே, அடுத்து ஐபிஎல் சீசனில் இவர் பெங்களூர் அணியில் தொடர்வாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
#2.கேதர் ஜாதவ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர், கேதர் ஜாதவ். இவர் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் தமது தனி ஆட்டத்தினால் அணியை வெற்றி பெறச் செய்தார். அதன் பின்னர், காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினார். இருந்தாலும் 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. இவர் விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 162 ரன்கள் மட்டுமே குவித்து கடும் ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர், காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினார். 8.4 கோடி ரூபாய்க்கு இவரை அணி நிர்வாகம் தக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#1.புவனேஸ்வர் குமார்:
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவர், புவனேஸ்வர்குமார். இவர் தமது துல்லியமான பந்துவீச்சு தாக்குதலால் உலகின் தலைசிறந்த வீரரின் விக்கெட்டை கூட கைப்பற்றி உள்ளார். ஆனால், நடப்பு தொடரில் இவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. இவர் விளையாடிய 15 போட்டிகளில் வெறும் 13 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி மிகுந்த ஏமாற்றம் அளித்தார். ஐபிஎல் மட்டும் அல்லாது உலக கோப்பை தொடரிலும் இவரது மோசமான பார்ம் தொடர்ந்தால் இந்திய அணியின் வெற்றியை பாதிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. உலக கோப்பை தொடரின் முதல் சில ஆட்டங்களில் இவர் தொடர்ந்து மோசமாக செயல்பட்டால் அணியில் இவருக்கு பதிலாக முகமது சமி இணைக்கப்படுவார்.