சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மே 12 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதிய போட்டியில் லாசித் மலிங்கா ஆட்டத்தின் இறுதி ஓவரை சிறப்பாக வீசி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4வது ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இறுதிப் போட்டியில் 5வது தோல்வியாகும், அத்துடன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணியின் 3வது தோல்வியாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உழவியல் ரீதியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகும். ஏனெனில் 2019 ஐபிஎல் சீசனில் சென்னை அணியை மும்பை 3 முறை வென்றுள்ளது. ஆனால் இந்த உளவியல் காரணியை சிதைக்கும் வகையில் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சகார் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு பவர்பிளே முடிவடையும் முன்னரே மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வீழ்த்தினர்.
மற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 149 ரன்களில் மும்பை அணியை சுருட்டினர். கீரன் பொல்லார்ட் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங்கில் ஒரு திட்டம் வகுக்காமல் களமிறங்கி சொதப்பியது. ஒரு கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது. சென்னை என்ன தவறு செய்தது? இறுதிப் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியதற்கான 3 காரணங்களை நாம் இங்கு காண்போம்.
#1 ரவீந்திர ஜடேஜா தனது முழு ஓவரையும் வீசவில்லை
ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங்கின் ஒரு முன்னணி வீரர். மிடில் ஓவரில் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர். ஆனால் ஜடேஜாவிற்கு இறுதிப் போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அதில் அவரது எகானமி ரேட் 6 ஆகும்.
மைதானம் ஸ்லோ பிட்ச் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களின் முழு ஓவரையும் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஜடேஜா தனது முழு ஓவரையும் வீசியிருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியினை மேலும் குறைவான ரன்களில் சென்னை அணி சுருட்டியிருக்கலாம்.
#2 எம்.எஸ்.தோனியின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது எம்.எஸ்.தோனியின் ரன் அவுட் ஆகும். தோனி ஸ்டம்ப் லைனில் இருக்கும் போது ஸ்டம்பின் பெய்லஸ் சிதறடிக்க படவில்லை. ஆனால் மறுபுற திசையிலிருந்து இந்த ரன் அவுட் பாரக்கும் போது அவுட் என தெரிந்தது. அத்துடன் தோனி ஒரு வளைவு நெழிவான பேட் வைத்திருந்ததால் சற்று காற்றில் இருந்தது போலவும் தெரிந்தது.
ஷேன் வாட்சன் நீண்ட இன்னிங்க்ஸில் இருக்கும் போது இதுபோல ரன்களை தோனி ஓடச் செய்ததும் ஒரு தவறாகும். இவரது விக்கெட் தான் போட்டியின் திருப்புமுனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.
#3 ஷேன் வாட்சனின் எதிர்பாரத ரன்-அவுட்
ஷேன் வாட்சன் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் வசம் திருப்பினார். 18வது ஓவரில் க்ருநல் பாண்டியா வீசிய ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி நம்பிக்கையை சிதைத்தார்.
வாட்சன் தனது விக்கெட்டை இழப்பதற்கு முன்பு சென்னை அணி வெற்றி பெற 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் வாட்சன் மைதானத்தின் இடப்பக்கமாக தட்டிவிட்டார். பெரும்பாலான ரசிகர்கள் இரண்டு ரன்கள் இந்த பந்தில் கிடைக்கும் என நம்பியிருந்தனர்.
ஆனால் ஷேன் வாட்சன் ஏற்கனவே காயத்துடன் விளையாடியதனால் இரண்டாவது ரன்னை எடுக்க முடியாமல் ஸ்டம்ப் லைனிற்கு அருகில் சென்று ரன் அவுட் ஆனார். இவரது விக்கெட்டிற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மீள முடியவில்லை.