2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி அட்டவனையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அணியில் உள்ள வீரர்களின் மோசமான ஆட்டத்திறனே ஆகும்.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஐபிஎல் சீசனிலும் பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூரு அணியின் இந்த மோசமான ஆட்டம் அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு உலகக் கோப்பையில் பங்கேற்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் அவரது நம்பிக்கையை முழுவதுமாக பாதிக்கும் என தெரிகிறது. இனிவரும் போட்டிகளிலாவது தங்களது ஆட்டத்திறனை பெங்களூரு அணி வெளிபடுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. இருப்பினும் தொடர் தோல்விகள் வீரர்களின் மனநிலையை மிகவும் பாதித்திருக்கும்.
#3 அனுபவ இந்திய வீரர்கள் என யாரும் அணியில் இல்லாதது
பெங்களூரு அணியில் அனுபவ இந்திய வீரர்கள் என்று பார்த்தால் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அணியில் ஒரு சில வீரர்களை தவிர பெரும்பாலான இந்திய வீரர்கள் அனுபவமில்லா வீரர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் ஆட்டத்தை வைத்து இளம் வீரர்களாக ஏலத்தில் வாங்கியது பெங்களூரு அணி. ஆனால் ஐபிஎல் தொடரில் அந்த வீரர்கள் தங்களை நிறுபிக்கவில்லை.
மற்ற ஐபிஎல் அணிகளுடன் பெங்களூரு அணியை ஒப்பிடுகையில் அனுபவ இந்திய வீரர்கள் மிகவும் குறைவு. இது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தாலும், அனுபவ வீரர்களின் வழிநடத்துதல் இல்லாமல் ஒரு அணி களமிறங்கினால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய கேடாகவே இருக்கும்.
அக்ஸிப் நாத், சிவம் தூபே மற்றும் பிரயாஸ் ரே பார்மன் போன்றோர் இளம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கும் திறமை இந்திய இளம் வீரர்களுக்கு அவ்வளவாக இல்லை. இதற்கு சரியான உதாரணமாக பெங்களூரு அணியின் இளம் வீரர்களை கூறலாம்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களுடன் களமிறங்கியே சாதித்துள்ளார். எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, ரகானே, தவான், புஜாரா போன்ற அனுபவ வீரர்களின் அனுபவம் விராட் கோலிக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியில் அனுபவ வீரர்கள் அவ்வளவாக இல்லாததால் விராட் கோலியால் கூட சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்த இயலவில்லை. புஜாரா மற்றும் திவாரி போன்ற இந்திய நிலையான வீர்களை பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியிருந்தால் சிறப்பான ஆட்டம் பெங்களூரு அணிக்கு கிடைத்திருக்கும்.