#2 வெளிநாட்டு வீரர்களின் மோசமான ஆட்டத்திறன்
வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் சிறப்பான அட்டத்தை வெளிபடுத்துவார்கள். வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் விளையாடும் அணிக்கு தங்களது அதிரடி ஆட்டத்தை வழங்குவர். ஒரு அணியில் உள்ள 4 வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு அந்த அணியின் வெற்றிக்கு சற்று அதிகமாகவே இருக்கும்.
இந்த 4 வீரர்கள் ஒவ்வொரு இடத்திலும் சிறந்த வீரர்களாக திகழ்வார்கள். பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸை தவிர மற்ற எந்த வீரர்களின் ஆட்டத்திறனும் சிறப்பானதாக இந்த ஐபிஎல் தொடரில் இல்லை. வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு இல்லாதது அந்த அணிக்கு அமைந்த மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
மொய்ன் அலி மற்றும் காலின் டி கிரான்ட் ஹாம் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஐபிஎல் தொடரில் வெளிபடுத்த தவறினார். ஹன்ரிஜ் கிளஸ்டனுக்கு வாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் குல்டர் நில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் பெங்களூரு அணியில் இன்னும் இடம்பெறவில்லை. டிம் சௌதி ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரது பந்துவீச்சு சற்று சிறப்பான முறையில் இருக்கும்.
தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் போன்ற அனுபவ கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த டி20 பேட்ஸ்மேன் மெக்கல்லமை இவ்வருட ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி அணியிலிருந்து நீக்கியது.