#1 அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸையே நம்பியிருக்கும் பெங்களூரு அணி
விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள். எதிரணி யாராக இருந்தாலும் அவர்களது பந்துவீச்சை சிதைக்கக் கூடிய வலிமை பெற்றுள்ளனர். அணியின் தேவையறிந்து ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவர்கள்.
இருப்பினும் பெங்களூரு அணியில் நிலையான பேட்டிங் என யாரும் இல்லாத நிலையில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் மீது மிகுந்த அழுத்தம் தரப்படுகிறது. முக்கியமாக இவர்களது விக்கெட்டுகளே அதிகம் குறிவைக்கப்படுகிறது. முதல் 3 போட்டிகளில் இவர்களது பங்களிப்பே பெங்களூரு அணிக்கு அதிகமாக இருந்திருக்கும்.
விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் இல்லாத அணியாக பெங்களூரு அணி திகழ்கிறது. இந்த நிலையில் இவர்களது ஆட்டம் அந்த அணிக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
விராட் மற்றும் ஏபிடி தவீர அனுபவ வீரர்கள் என அந்த அணியில் அவ்வளவாக இல்லை. இவர்களது அனுபவத்தையும் மற்ற இளம் வீரர்கள் பயன்படுத்தி கொள்ளவும் இல்லை. டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களான இவர்களுக்கு பந்துவீச எந்த பௌலரும் சற்று தடுமாறுவர். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட காரணங்களே பெங்களூரு அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.