2019 ஐபிஎல் தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக விளங்கியது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஏனெனில், அணியில் இடம்பெற்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கேய்ல் மற்றும் மற்றும் கே.எல்.ராகுலின் ராகுலின் பேட்டிங்கை இந்த இந்த அணி கொண்டுள்ளதால் பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இந்த அணியில் நிலையான வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறாததால், பவர்பிளே மற்றும் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இது மட்டுமல்லாது, இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் சற்று கவலை அளிக்கும் வகையில் தான் இருந்தது. எனவே, இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ள ஏலத்தில் விற்பனை ஆகாத 3 வீரர்கள் ஒருவேளை இந்த அணியில் இடம் பெற்றிருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்திருக்கும், பஞ்சாப் அணி.
#1.மனோஜ் திவாரி:
33 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் புனே அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1695 ரன்களை குவித்துள்ளார். மேலும், 26 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஒருவேளை இவர் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தால், மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று முன்னேற்றம் அடைந்திருக்கும். மேலும், அணிக்கு ஒரு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. 2017 ஆம் ஆண்டு புனே அணிக்காக இடம் பெற்று தன்னால் முடிந்த சிறப்பான தொடரை அளித்திருந்தார், மனோஜ் திவாரி. பின்னர், கடந்த ஆண்டு சோபிக்க தவறியதால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
#2.இஷான் கோரல்:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான இஷான் கோரல், சமீப காலங்களில் முதல்தர போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்காற்றினார். பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தமது அபாரமான பந்து வீச்சு தாக்குதலால் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். துரதிஷ்டவசமாக, கடந்த இரு ஐபிஎல் இடங்களிலும் எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை இவர் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தால், அஸ்வின் வரை பவர் பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் பயன்படுத்தியிருப்பார். இதன் மூலம், அணிக்கு வெற்றியையும் அளித்திருப்பார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் கூட 7 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3.மோர்னே மோர்கல்:
ஐபிஎல் 2019 தொடருக்கான ஏலத்தில் சில சர்வதேச வீரர்கள்கூட புறக்கணிக்கப்பட்டனர். அவற்றில், ஒருவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல். இவர் ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்காக பங்கேற்றுள்ளார். பவர் பிளே மற்றும் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் சிறப்பாக செயல்படும் பந்துவீச்சாளரான இவர், 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெறுவதற்கு தகுதியான வீரர்களில் இவரும் ஒருவர். எனவே, மேற்கூறிய மூவரும் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தால் அணியின் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகி இருக்கும்.