ஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளைஞர்கள்

அன்கிட் ராஜ்பூட்
அன்கிட் ராஜ்பூட்

கிங்ஸ் XI பஞ்சாப் அணி வெற்றி தோல்வி ஏறுமுகம் இறங்குமுகம் என்று ஒரு நிலையான சீசனை தந்தது இல்லை. இறுதி போட்டிவரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை ஒருமுறை இழந்தது. 2019ம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது குறிக்கோள் முடிந்தவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான். அது டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்திலேயே தெரிந்தது. அனுபவம் மற்றும் இளைஞர்களின் பலம் என்று சமமாக இருக்கும் பஞ்சாப் அணி, இந்த முறை பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளைஞர்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#3 முஜிபுர் ரஹ்மான்

முஜிபுர் ரஹ்மான்
முஜிபுர் ரஹ்மான்

கடந்த ஐபிஎல் சீசனில் மிஸ்டரி பௌலர் என்று பெயர் வாங்கியவர் முஜிபுர் ரஹ்மான். வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 16 வயதிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியவர். இவரது சூழலில் விழாத அனுபவ வீரர்களே இல்லை எனலாம். ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் தன் திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். வருகிற 12வது ஐபிஎல் சீசனிலும் சென்ற ஆண்டை போலவே சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் வீசக்கூடிய 4 ஓவர்களில் விக்கெட் எடுக்க தவறினாலும், சரியான சமயத்தில் எதிரணியின் ரன் வேட்டையை தடுக்க உதவுவார். சென்ற ஆண்டு இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனைத்து போட்டியிலும் பவர் பிலேவில் பந்துவீசி ரன்னை கட்டுக்குள் வைத்தார்.

#2 நிக்கோலஸ் பூரான்

நிக்கோலஸ் பூரான்
நிக்கோலஸ் பூரான்

23 வயதான மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பூரான், உள்ளூர் டி20 போட்டிகளில் அதிரடியாய் ஆடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்தார். 2017 ஆம் ஆண்டே ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் எடுக்கப்பட்ட இவர், ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தன் ஆட்டத்தை மெருகேத்தி கொண்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு கடந்த ஏலத்தில் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. விக்கெட் கீப்பர் அந்தஸ்தும் இவரிடம் இருப்பதால், ஆடும் XIல் இடம் கிடைத்தால் நிச்சயம் அந்த அணிக்கு பலனாய் இருக்கும். இவர் அணியில் இடம் பிடிக்கும் பட்சத்தில் பகுதி நேர விக்கெட் கீப்பரான கே.எல் ராகுல் பீல்டிங் பார்த்துக்கொள்வார். பந்தை சிக்ஸருக்கு அடிப்பதில் வல்லவரான பூரான், பஞ்சாப் அணிக்கு இந்த ஆண்டு திருப்புமுனையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

#1 சாம் குர்ரான்

சாம் குர்ரான்
சாம் குர்ரான்

ஐபிஎல் இல் தனது முதல் போட்டிக்காக காத்திருக்கும் வீரர்களுள் ஒருவர் சாம் குர்ரான். இங்கிலாந்து அணியின் தற்போதைய மிகச்சிறந்த ஆல் ரவுண்டர். அணிக்கு தேவைப்படும் நேரத்தில் அதிரடி ஆட்டம் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தக்கூடியவர். இந்திய அணி இங்கிலாந்து அணி சென்ற பொழுது இவரது பேட்டிங் தான் இந்திய அணியின் வெற்றியை பறித்தது என சொல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடினார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் சிறந்த விளங்க கூடிய குர்ரான், பவர்-பிலேவிலும் பந்துவீசும் வல்லமை பெற்றவர். ஐபிஎல் இல் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை அணியில் இடம் பெரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். சரியான ஆல் ரவுண்டர் இல்லாமல் திணறிவரும் பஞ்சாப் அணியின் நீண்டநாள் பிரச்சனையை குர்ரான் தீர்த்து வைத்தால் ஆச்சரியம் இல்லை.

Quick Links

App download animated image Get the free App now