ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளம் வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி

சென்ற ஆண்டு சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டு போதிய அளவு தாக்கம் ஏற்படுத்தாத அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். பிலே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. பல ஜாம்பவான்களை உள்ளடக்கிய மும்பை அணி 14 போட்டிகளில் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெறப்பட்டது. தற்போது குயின்டன் டீ காக், யுவ்ராஜ் சிங், மலிங்கா என முன்னனி வீரர்களை ஏலத்தில் எடுத்ததுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 24ம் தேதி வான்கடே மைதானத்தில் முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது.

ஆகவே மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமாகப்போகும் மூன்று இளைஞர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

#3 இஷான் கிஷன்

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

இஷான் கிஷன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயத்திற்குற்பட்ட வீரர்களுக்கான அணியில் இடம் பிடித்தார். சிறப்பாக ஆடிய அந்த தொடரில் இந்திய அணி இறுதி போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இஷான் கிஷன். இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணி. 20 வயதான கிஷன், ஒரு தனிநபராக ஜார்கண்ட் வீரராக அதிக பட்ச ஸ்கோரை(273) ரஞ்சி போட்டியில் பதிவு செய்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற இவர் குஜராத் அணிக்காக 35 இலட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். இரண்டு சீசன்கள் விளையாடிய இவர் மொத்தம் 319 ரன்கள் எடுத்துள்ளார். பின்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய இவர் 6.2 கோடி கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடினார். கடந்த சீசனில் 275 ரன்கள் எடுத்த கிஷன் ஸ்ட்ரைக் ரேட்டாக 149.5 வைத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

#2 மயங் மார்கண்டே

மயங் மார்கண்டே
மயங் மார்கண்டே

இவரை போன்று சிறப்பான ஐபிஎல் துவக்கம் எந்த வீரருக்கும் அமையவில்லை என சொல்லலாம். இவரது முதல் போட்டி சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதல் விக்கெட்டாக அம்படி ராயுடுவின் விக்கெட்டை எடுத்த மார்கண்டே, அடுத்த ஓவரிலேயே கேப்டன் தோனியின் விக்கெட்டை எடுத்து அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 14 போட்டிகளில் விளையாடிய மார்கண்டே 15 விக்கெட்களை சாய்த்தார். 21 வயதான இவரை மும்பை அணி போராடி தான் ஏலத்தில் எடுத்தது. அதற்கு கைமாறு செய்யும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2018-19 ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடிய மார்கண்டே, 29 விக்கெட்கள் எடுத்து அணியின் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். தற்போது இந்திய அணியின் டி20 வாய்ப்பு பெற்ற மார்கண்டே, மும்பை அணிக்கு வெற்றி தேடி தருவார் என கூறப்படுகிறது.

#1 ராகுல் சஹார்

ராகுல் சஹார்
ராகுல் சஹார்

19 வயது லெக் ஸ்பின் பந்துவீச்சாளரான ராகுல் சஹார், உள்ளூர் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட கூடியவர். 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே அணியால் 20 இலட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். விளையாடிய 3 போட்டிகளில் 2 விக்கெட்கள் எடுத்தார். 2018 ஆண்டு ஏலத்தில் 1.9 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ராகுல் சஹார், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். ஆனால் சென்ற ஆண்டு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2018-19 ஆண்டு ரஞ்சி போட்டியில் 41 விக்கெட்களை சாய்த்து நல்ல பார்மில் உள்ளார். இது மட்டும் இல்லாமல் விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்த பார்முடன் மும்பை அணிக்கு களமிறங்கினால், சென்ற ஆண்டு தவற விட்ட பிலே ஆப் வாய்ப்பை இந்த முறை பெரும்.

Quick Links