#3. சூர்யகுமார் யாதவ்:
2012ம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் பங்கேற்று மும்பை அணிக்காகவும் கொல்கத்தா அணிக்காகவும் விளையாடி வந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு மும்பை அணிக்காக ஒப்பந்தமாகி பேட்டிங்கில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணாத வீரர்களில்அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதே தொடரில் இவர் தொடக்க வீரராகவும் களம் இறங்கினார்.
இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடியபோது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் ஒரு பின்கள பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கினார். ஆனால், கடந்த ஆண்டு தொடக்க வீரராக களம் இறங்கி அதிக ரன்களைக் குவித்த போதிலும், இந்திய அணியில் அம்பத்தி ராயுடு போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைத்தமையால் சர்வதேச கிரிக்கெட்டிற்கான வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை.
#2. ரஜத் பாட்டியா:
ஐபிஎல் தொடர்களில் ஒரு சிறந்த நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களில் ஒருவர், ரஜத் பாட்டியா. இவர் இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் சீன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
பவுலிங்கில் அவ்வப்போது வேறுபாடுகளை காட்டும் பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் போட்டிகளில் 7.4 என்ற எகானாமியோடு 71 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெல்லி மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காக உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் தனது திறனை முழுமையாக நிரூபித்தாலும் சர்வதேச போட்டிகளில் இவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
#1. சபாஷ் நதீம்:
கடந்தாண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற காரணத்தால் மூன்றாவது போட்டியின் ஆடும் லெவனில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக முதல்முறையாக சீனியர் அணியில் இடம் பெற்ற இவருக்கு இறுதிவரை ஆடும் லெவனில் ஏமாற்றமே மிஞ்சியது.
ஜார்க்கண்ட்டை சேர்ந்த இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், முதல்தர போட்டிகளில் 307 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் 13 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
விஜய் ஹசாரே டிராபியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும், அந்த தொடரில் 40 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். இவரது துல்லியமான பந்துவீச்சு இந்திய அணிக்கு நிச்சயம் வருங்காலத்தில் பெரிதும் உதவும். இந்நாள்வரை சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைக்காத இவர் வெகு விரைவிலேயே அணியில் இணைய வாய்ப்பு அளிக்கப்படும் என நம்பலாம்.
எழுத்து: ஸ்ரேயாஷ்
மொழியாக்கம்: சே.கலைவாணன்