ஐபிஎல் அணிகள் எப்பொழுதும் சிறந்த வெளிநாட்டு வீரர்களையே தங்கள் அணியில் விளையாட தேர்வு செய்யும். ஒவ்வொரு அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாடலாம். அந்த அணியில் அவர்களது ஆட்டத்திறன் சிறப்பான அளவிற்கு இருக்கும்.
வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர், ஆன்ரிவ் ரஸல், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தாங்கள் விளையாடும் அணியின் முக்கிய வீரர்களாகவும், போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். ஆனால் சில வெளிநாட்டு வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாம் இங்கு 2019 ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 5 வெளிநாட்டு வீரர்களை பற்றி காண்போம்.
#1 கிறிஸ் லின்
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியில் வலிமை வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்குகி பவர் பிளேவில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடுவார். சுனில் நரைன் ஒரு பின்ச் ஹீட்டர் என்பதால் அதிரடி ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிபடுத்த ஆரமித்து விடுவார். கிறிஸ் லின் சுனில் நரைனை விட மிக முக்கியமான தொடக்க ஆட்டக்காரர் ஆவார். கடந்த இரு வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக தொடக்க வீரராக கிறிஸ் லின் சிறப்பாக விளையாடியுள்ளார்.
ஆனால் இந்த வருட ஐபிஎல் சீசனில் அதற்கு நேர்மாறாக இவரது ஆட்டத்திறன் உள்ளது. கிறிஸ் லின் சுழற்பந்து வீச்சில் சுமாராகவே விளையாடுவார். எதிரணியினர் இதனை பயன்படுத்தி கொண்டு சுழற்பந்து வீச்சை வைத்து ஆரம்பத்திலேயே இவரை வீழத்தி விடுகின்றனர். இந்த சீசனில் 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஒரு போட்டியில் இவரது அதிகபட்ச ரன்கள் 20.
கூடிய விரைவில் தனது பழைய ஆட்டத்திறனை வெளிகொணர்ந்து ஆடும் XI-ல் தனது இடத்தை தக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 கீரன் பொல்லார்ட்
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2010ஆம் ஆண்டிலிருந்து முன்னனி வீரராக பொல்லார்ட் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தார்.
கடந்த ஐபிஎல் சீசனில் இவரது மோசமான ஆட்டத்திறனால் ஆடும் XI-லிருந்து நீக்கப்பட்டார். இவ்வருட ஐபிஎல் தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டும் அதனை சரியாக உபயோகப்படுத்தவில்லை.
இந்த சீசனில் 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 33 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் பௌலிங் வாய்ப்பு ஏதும் பொல்லார்டிற்கு வழங்கப்படவில்லை.
எனவே கூடிய விரைவில் இவருக்கு மாற்று வீரராக பென் கட்டிங் அல்லது இஷான் கிசான் களமிறக்கப்படுவார்கள்.
#3 ஷிம்ரன் ஹெட்மயர்
கடந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய தொடரில் ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். சுழற்பந்து வீச்சிற்கு எதிரான இவரது சிறப்பான ஆட்டத்திறனால் ஷிம்ரன் ஹெட்மயர் 2019 ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணியால் 4.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.
பெங்களூரு அணி ஒரு சரியான அணி கட்டமைப்பு இல்லாமல் இவ்வருட ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதவித்து வருகிறது. முக்கியமாக பேட்டிங் கடும் சொதப்பலாக உள்ளது. இவரது ஆட்டத்திறன் பெங்களூரு அணிக்கு சிறிது கூட கை கொடுக்கவில்லை. விளையாடிய 4 போட்டிகளிலும் விரைவாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
4 போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் முறையே 0, 5, 9, 1 ஆகும். இவ்வருட ஐபிஎல் தொடரில் ரன்களை அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார். பெங்களூரு அணி ஒரு சரியான அணி தேர்விற்கு இன்றளவும் போராடி வருகிறது. இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் ஹட்மயரை பெங்களூரு அணியில் காணுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
#4 காலின் டி கிரான்ட் ஹோம்
காலின் டி கிரான்ட் ஹோம் தற்போது வரை ஒரு சிறந்த ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிபடுத்தியது இல்லை. ஆனால் பெங்களூரு அணியில் ஆடும் XI-ல் எப்படியாவது இடம்பிடித்து விடுகிறார். இதற்கு காரணம் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணிக்கு திரும்பாததுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பிடித்தார்.
3 போட்டிகளில் பங்கேற்று 43 ரன்களை பேட்டிங்கிலும், பௌலிங்கை மோசமாகவும் வீசி வந்து பெங்களூரு அணியில் தனது இடத்தை உறுதி செய்ய தவறிவிட்டார். இவர் அணியில் இடம் பெற்றிருந்த போது டாப் ஆர்டர் சொதப்பிய போது கிரான்ட் ஹோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் XI-லிருந்து நீக்கப்பட்டார்.
காலின் டி கிரான்ட் ஹோம் மீண்டும் ஆடும் XI-ல் இடம்பெறுவது மிகவும் கடினமான விஷயமாகும்.
#5 ஸ்டிவன் ஸ்மித்
கடந்த ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த ஸ்டிவன் ஸ்மித் 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார். இவரது நெருங்கிய நண்பர் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதலே அனல் பறக்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் விளையாடிய 3 போட்டிகளில் அடித்த ரன்கள் முறையே 20, 28, 38 ஆகும். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை முடித்து வைப்பார் என்ற எதிர்பார்த்திருந்த நிலையில் சாம் கர்ரான் பௌலிங்கில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது.
இவர் அதிரடியாக விளையாடும் அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன். இனிவரும் போட்டிகளில் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிபடுத்தி தன்னை மீண்டும் சிறந்த பேட்ஸ்மேனாக உலகிற்கு அறிவிப்பார்.