ஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்

Which Indian debutant will make the most impact?
Which Indian debutant will make the most impact?

#1 வரூன் சக்ரவர்த்தி (கிங்ஸ் XI பஞ்சாப்)

Most Expensive Debuted IPL Player Mr. varun chakravarti (8.4 Cr)
Most Expensive Debuted IPL Player Mr. varun chakravarti (8.4 Cr)

வரூன் சக்ரவர்த்தி கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் மிகவும் அதிகத் தொகயான 8.4 கோடிக்கு 2019 ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டுள்ளார். முன்னாள் கட்டிடக்கலை நிபுணரான இவர் கிரிக்கெட்டில் சாதித்த கதை கேட்பவர்கள் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

தொடக்கத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த இவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் சுழற்பந்து வீச்சாளராக தன்னை மாற்றி 7 கோணங்களில் வீசும் திறமை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 2018-19 விஜய் ஹசாரே கோப்பையில் 9 போட்டிகளில் பங்கேற்று 16.68 சராசரி மற்றும் 4.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இவர் சுழற்பந்து வீச்சை டென்னிஸ் பந்தில்தான் விளையாட கற்றுக் கொண்டதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 27வயதான இவர் இதே வித்தையை கிரிக்கெட் பந்திலும் முயற்சித்து வெற்றி கண்டார்.

பௌலிங் ஆல்-ரவுண்டரான இவர் கடந்த ஐபிஎல் சீசனில் பயிற்சி ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்களுக்கு பந்து வீசி உள்ளதால் அவர்களது குறைகளை இவர் அறிந்திருப்பார்.

முஜிப்புற் ரகுமான், அஸ்வின், ஹர்பிரிட் பிரார், வரூன் சக்ரவர்த்தி ஆகியோரை கொண்டு பஞ்சாப் அணி சிறந்த சுழற்பந்து வீச்சுடன் 2019 ஐபிஎல் தொடரில் திகழ்கிறது.

Quick Links