ஐ.பி.எல் 2019: சி.எஸ்.கே. -ஆர்.சி.பி  போட்டியின் முன்னோட்டம்

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இந்தச் சீசனில் எந்த அணி வெற்றி பெற போகும் என்று ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் கேப்டன் கூல் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தலைமையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சென்னையில் சேப்பாக் மைதானத்தில் மார்ச் 23-ஆம் தேதி மோதவுள்ளனர். இரு அணிகளும் சமபலத்தில் உள்ளனர். இந்தப் போட்டி விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு 16 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. இறுதித்போட்டியில் சன் ரைசார்ஸ் ஹைதராபாத் அணியுடன் வென்று கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.

கடந்த சீசனில் பெங்களூர் அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. இதுவரை சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூர் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் இல்லாமல் முடிந்தது. சென்னை அணி பெங்களூர் அணியுடன் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சென்னை அணியின் முக்கிய வீரர்கள்

பேட்டிங் பொறுத்தவரை கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பாக விளையாடிய வீரர் அம்பதி ராய்டு. மும்பை அணிக்கு விளையாடி வந்த ராய்டு கடந்த ஆண்டு சென்னை அணிக்கு சிறப்பான பங்களிப்பை ஆற்றினார். 16 போட்டிகளில் 602 ரன்கள் மற்றும் அதிக பட்சமாக 100* எடுத்தார். அடுத்தபடியாக ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் தேவையான நேரங்களில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். பந்து வீச்சில் அறிமுக வீரரான ஷர்டுல் தாகூர் முதல் ஐ.பி.எல். தொடரிலேயே சிறப்பாக பந்து வீசினார். பிராவோ, ஜடேஜா, லுங்கி இங்கிடி ஆகியோர் பந்து வீச்சில் தங்கள் பங்களிப்பை ஆற்றினர்.

பெங்களூர் அணியின் முக்கிய வீரர்கள்

விராத் கோலி
விராத் கோலி

பேட்டிங் வரிசையில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு சுவர் போல இருந்து வருகின்றனர். பார்த்தீவ் படேல் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் சிம்ரான் ஹெட்மயர் பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், சஹால், முஹம்மது சிராஜ் ஆகியோர் அணிக்கு முக்கிய வீரர்களாக இருந்து வருகின்றனர்.

மார்கஸ் ஸ்டோனிஸ், மொய்ன் அலி, கிரான்ஹோம் போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு சிறப்பாக பங்களிப்பார்கள்.

அணி விவரம்

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸ், முரளி விஜய், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், டேவிட் வில்லி, பிராவோ, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், தீபக் சஹார், கே.எம். ஆசிஃப், லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர், கரன் ஷர்மா.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

விராத் கோலி, ஏ.பி.டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், யுவேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், பவான் நேகி, நாதன் கொல்டர்-நைல், மோயீன் அலி, முகமது சிராஜ், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவதிப் சைனி, குல்வந்த் கெஜோலிலியா, சிவம் துபே, சிம்ரான் ஹெட்மயர், அக்ஷ்திப் நாத், பிரயாஸ் பார்மன்.

எழுத்து-அஜய் நாயர்

மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்