ஐபிஎல் 2019: அணில் கும்ளேவின் கனவு XI

Anil kumlae
Anil kumlae

2019 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 12 அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியுடன் இவ்வருட ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டியில் பலபரிட்சை நடத்தவிருக்கின்றன. ஐபிஎல் தொடர் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் அணில் கும்ளே இவ்வருட ஐபிஎல் சீசனிற்கான தனது கனவு XI ஐ அறிவித்துள்ளார்.

சமீபத்தில் "கிரிக்கெட் நெக்ஸ்ட்" என்ற இனையத்திற்கு காணோளி மூலம் நேர்காணலில் பங்கேற்றார் அணில் கும்ளே. அப்போது 2019 ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டத்திறனை வைத்து தனது ஐபிஎல் XIஐ அவர் தேர்வு செய்துள்ளார். இந்த அணியை தேர்வு செய்யும் போது கும்ளே இரு ஐபிஎல் நுணுக்கங்களை சரியாக பயன்படுத்தி உள்ளார். அதில் ஒன்று தனது கனவு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களை சரியாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் லீக் சுற்றில் சரியான ஆட்டத்திறனை வெளிபடுத்திய வீரர்களை மட்டுமே தனது கனவு அணியில் சேர்த்து உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ளே தனது கனவு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இவ்வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதல் 2 இடங்களில் வகிக்கும் டேவிட் வார்னர் (692) மற்றும் கே.எல்.ராகுலை(592) தேர்வு செய்துள்ளார். இருவருமே தங்களது அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரெயஸ் ஐயர்-ரை மூன்றாவது பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரெயஸ் ஐயர் சரியாக அணியை வழிநடத்தி 6 வருடங்களுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ரிஷப் பண்ட், ஆன்ரிவ் ரஸல், ஹர்திக் பாண்டியா ஆகியோரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்துள்ளார். ரிஷப் பண்ட் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டக்காரர். எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குவாலிஃபையர் 2 ற்கு டெல்லி அணியை அழைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும்.

மறுமுனையில், 2019 ஐபிஎல் தொடரில் ஆட்டத்தின் போக்கை தங்கள் வசம் மாற்றும் திறமையை கொண்டவர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஆன்ரிவ் ரஸல் திகழ்ந்தனர். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடியவர்களில் தனியாக தெரிந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. எனவே அனைத்து ஆடும் XI-லும் இவர்களது பெயர் இடம்பெற்றிருந்தது. எம்.எஸ்.தோனி அணியின் கேப்டனாக கும்ளே தேர்வு செய்துள்ளார். இவ்வருட ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இம்ரான் தாஹீர் மற்றும் ஸ்ரெயஸ் கோபால் ஆகியோர் இரு சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் காகிஸோ ரபாடா இரு வேகப்பந்து வீச்சாளராக தேர்வாகி உள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரபாடா முதுகு வலி காரணமாக தனது நாட்டிற்கு சென்று விட்டாலும், தற்போது வரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பூம்ரா சிறப்பான பௌலிங்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அளித்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் கோபால் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தனர். எனவே கும்ளேவின் கனவு XI ல் இடம்பெற தகுதியானவர்களே.

கும்ளேவின் கனவு XI:

டேவிட் வார்னர், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆன்ரிவ் ரஸல், ஸ்ரேயஸ் கோபால், இம்ரான் தாஹீர், ஜாஸ்பிரிட் பூம்ரா, காகிஸோ ரபாடா.

Quick Links

App download animated image Get the free App now