உலகின் நம்பர் 1 டி20 தொடர் இந்தியன் பிரீமியர் லீக் சிறந்த பரபரப்பு மற்றும் அனல் பறக்கும் ஆட்டத்திறன்களுடன் 8 வாரங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழத்தி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஜாஸ்பிரிட் பூம்ரா டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டதற்காக ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவர் இறுதிப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழந்த மற்ற ஆட்டக்காரர்களான ஃபேப் டுயுபிளஸ்ஸி (ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன்) , ஷர்துல் தாகூர் (சிறப்பான கேட்ச்) , ராகுல் சகார் (ஆட்டத்தை மாற்றுபவர்), கீரன் பொல்லார்ட் (சூப்பர் ஸ்ட்ரைக்கர்) ஆகியோர் இப்போட்டிக்கான மற்ற விருதினை வென்றனர். அத்துடன் இவ்வருட ஐபிஎல் தொடரில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றுகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்ற ஆட்டக்காரர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது ஐபிஎல் நிர்வாகம்.
நாம் இங்கு 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியதற்காக விருது வென்ற வீரர்களின் பட்டியலை காண்போம்:
1. ஆரஞ்ச் தொப்பி (அதிக ரன்கள்) - டேவிட் வார்னர் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) - 12 போட்டிகளில் 692 ரன்கள்
2. ஊதா தொப்பி (அதிக விக்கெட்டுகள்) - இம்ரான் தாஹீர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகள்
3. அதிக மதிப்புமிக்க வீரர் - ஆன்ரிவ் ரஸல் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்) - 510 ரன்கள் & 11 விக்கெட்டுகள்
4. வளர்ந்து வரும் வீரருக்கான விருது - சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்) - 13 போட்டிகளில் 296 ரன்கள்
5. ஸ்டைலிஸ் பேட்ஸ்மேனிற்கான விருது - கே.எல்.ராகுல் (கிங்ஸ் XI பஞ்சாப்) - 14 போட்டிகளில் 593 ரன்கள்
6. ஆட்டத்தை மாற்றுபவருக்கான விருது - ராகுல் சகார் (மும்பை இந்தியன்ஸ்) - 12 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்
7. சிறந்த கேட்ச்சிற்கான விருது - கீரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்) - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் சுற்றில் சுரேஷ் ரெய்னாவின் கேட்ச்
8. அதிவேக அரைசதம் - ஹர்திக் பாண்டியா ( மும்பை இந்தியன்ஸ்) - கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதம்
9. சூப்பர் ஸ்ட்ரைக்கர் - ஆன்ரிவ் ரஸல் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்) - 205 ஸ்ட்ரைக் ரேட்
10. ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் சிறந்த அறத்துடன் விளையாடிய அணிக்கான விருது - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
11. சிறந்த ஆடுகளம் மற்றும் சிறந்த ஆடுகள கோப்பை - பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் (மொகாலி) மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்)