கடந்த சில வாரங்களாக ஐபிஎல் 2019ல் தங்களது அணியில் தக்கவைக்கப்படும் வீரர்களின் விவரங்களை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுவந்தன. சில சிறந்த வீரர்களும் கூட ஐபிஎல் அணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுட்டும் வகையில் அமைந்தது.
2008 முதல் 2018 வரையிலான ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு அணிகளில் ஆடி வந்தனர். ஒரு சில சிறந்த வீரர்கள் மட்டுமே நிரந்தரமாக ஒரே அணியில் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை பெற்றிருந்தனர். ஆனால் 2019 ஐபிஎல் இல் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தங்களது அணியிலேயே தக்க வைக்கும் வாய்ப்பு அந்த அணியின் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வீரர்களை ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு பரிமாற்றி கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது . கடந்த சீசனில் சரியாக விளையாடத வீரர்களை அணியிலிருந்து நீக்கவும் உரிமை அளித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கும் மற்றும் புதிதாக அறிமுகமாகியுள்ள டி20 வீரர்களுக்கும் டிசம்பரில் ஐபிஎல் ஏலம் நடைபெறும்.
கடந்த சீசனின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கபட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் சம்பளத்தை பற்றியும் அறிவித்துள்ளது சென்னை அணி நிர்வாகம் . 3 வீரர்கள் மட்டுமே சென்னை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். பெரும்பாலான முதுபெரும் கிரிக்கெட் வீரர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவே சென்னை அணி வெற்றியின் மிகப்பெரிய இரகசியம் ஆகும்.
கீழே உள்ள வீரர்கள் மட்டுமே சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். மற்றும் அவர்களுடைய சம்பளத்தையும் சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எம்.எஸ்.தோனி - 15 கோடி (US $ 2.1 மில்லியன்)
சுரேஷ் ரெய்னா - 11 கோடி ( US $ 1.5 மில்லியன்)
கேதார் ஜாதவ் - 7.8 கோடி (US $ 1.1 மில்லியன்)
ரவீந்திர ஜடேஜா - 7 கோடி (US $ 974,022.00)
ட்வெய்ன் பிராவோ - 6.4 கோடி (US $ 890,534.40)
கர்ன் சர்மா- 5 கோடி (US $ 695,730.00)
ஷேன் வாட்சன்- 4 கோடி (US $ 556,584.00)
ஷர்துல் தாகூர் - 2.6 கோடி (US $ 361,779.60)
அம்பாதி ராயுடு - 2.2 கோடி (US $ 306,121.60)
டேவிட் வில்லி - 2 கோடி (US $ 278,292.00)
ஹர்பஜன் சிங்- 2 கோடி (US $ 278,292.00)
முரளி விஜய் - 2 கோடி (US $ 278,292.00)
ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் - 1.6 கோடி(US $ 222,633.60)
இம்ரான் தஹிர் - 1 கோடி (US $ 139,146.00)
சாம் பில்லிங்ஸ் - 1 கோடி (US $ 139,146.00)
தீபக் சகார் - 80 இலட்சம் (US $ 111,316.80)
லுங்கி நிகிடி - 50 இலட்சம் (US $ 69,573.00)
மிட்செல் சான்ட்னர் - 50 இலட்சம் (US $ 69,573.00)
கே எம் அசிப் - 40 இலட்சம் (US $ 55,658.40)
சைதன்யா பிஷ்னோய் - 20 இலட்சம்(US $ 27,829.20)
துருவ் ஷோரே - 20 இலட்சம் (US $ 27,829.20)
மோனு சிங் - 20 இலட்சம் (US $ 27,829.20)
நாராயண் ஜெகதீசன் - 20 இலட்சம் (US $ 27,829.20)
எழுத்து : மசூன் அலி
மொழியாக்கம் : சதீஸ்குமார்