ஐபிஎல் 2019: டெல்லி கேபிடல்ஸ் அணியை பற்றி ஒரு அலசல்

Delhi Capitals
Delhi Capitals

டெல்லி டேர்டெவில்ஸ் அணிதான் டெல்லி கேபிடல்ஸ் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி மீதான மோசமான எண்ணத்தை மாற்றி இந்த வருடம் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் மிகப்பெரிய வீரர்களான கௌதம் காம்பீர், க்ளின் மேக்ஸ்வெல், ஜேஸன் ராய், லைம் பிளன்கட் ஆகியோரை அணியிலிருந்து நீக்கியுள்ளது. அதே சமயத்தில் இவர்களுக்கு சமமான வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி 2019 ஐபிஎல் ஏலத்தில் வாங்கியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமிருந்து ஷிகார் தவானை டெல்லி கேபிடல்ஸ் அணி பரிமாற்றம் செய்தது. அதேநேரத்தில் விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷபாஜ் நதீம் ஆகியோரை டெல்லி அணியிலிருந்து ஹைதராபாத் அணிக்கு அனுப்பியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி

பேட்ஸ்மேன் - ஷிரேயஸ் ஐயர், ஷிகார் தவான், பிரித்வி ஷா, காலின் இன்கிராம், மன்ஜோட் கல்ரா

ஆல்-ரவுண்டர்கள் - ஹனுமா விகாரி, காலின் முன்ரோ, அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், கீமோ பால், ஷேர்ஃபேன் ரூதர்போர்ட் மற்றும் ஜலாஜ் சக்சேனா

விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பண்ட் மற்றும் அன்குஸ் பெய்ன்ஸ்

பந்துவீச்சாளர்கள் - ஹர்சல் படேல், அமீத் மிஸ்ரா, ராகுல் திவாத்யா, சந்தீப் லாமிச்சனே, ட்ரென்ட் போல்ட், காகிஸோ ரபாடா, ஏவேஸ் கான், இஷாந்த் சர்மா, நாத்து சிங் மற்றும் பந்தாறு ஐயப்பா.

அணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு

டெல்லி கேபிடல்ஸ் அணி அதிக தொடக்க ஆட்டக்காரர்களை கொண்டுள்ளது. இந்த அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கியவர்கள் தான். டெல்லி அணி பேட்டிங் வரிசை அமைக்க சற்று சிரமப் படலாம். இருந்தாலும் ஷிகார் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும்தான் பெரும்பாலும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையே ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த அணியில் ரிஷப் பண்ட், காலின் முன்ரோ, காலின் இன்கிராம் போன்ற சில அதிரடி டி20 பேட்ஸ்மேன்கள் உள்ளதால் டெல்லி கேபிடல்ஸ் அணி 2019 ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

ஹனுமா விகாரி டெல்லி அணியினால் வாங்கப்பட்ட மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினால் இவர் சரியாக பார்ட்னர் ஷிப் அமைத்து அணியின் ரன்களை உயர்த்துவார். ஆல்-ரவுண்டர்கள் அக்சர் படேல் மற்றும் கிறிஸ் மோரிஸ் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்துவர்.

பௌலிங்கில் காகிஸோ ரபாடா, டிரென்ட் போல்ட் மற்றும் ஏவிஸ் கான் ஆகியோரின் மின்னல் வேக பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும். ரபாடா பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை அவ்வளவு எளிதாக வெளிபடுத்த முடியாது. ஏந்த வீரராவது காயம் காரணமாக விலகினாள் அவர்களுக்கு சிறந்த மாற்று வீரராக நாத்து சிங் இருப்பார். கிறிஸ் மோரிஸ் டெத் ஓவரிலும், அக்சர் படேல் மிடில் ஓவரிலும் பந்துவீசுவதில் கைத்தேர்ந்தவர்களாக உள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஒரேயொரு குறை என்னவென்றால் அனுபவம் இல்லா இளம் கேப்டன் ஷிரேயஸ் ஐயர். ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இருப்பினும் கடந்த சீசனில் இரண்டாவது பாதியில் ஸ்ரேயஸ் ஐயர் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். கடந்த ஐபிஎல் தொடர்களை போல் அல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய தொடராக 2019 ஐபிஎல் தொடர் அமைந்து கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அணியின் மதிப்பீடுகள்

பேட்ஸ்மேன்கள் - 8/10

ஆல்-ரவுண்டர்கள் - 6/10

பந்துவீச்சாளர்கள் - 6/10

நன்றி: பாரத் ஆர்மி