ஐ.பி.எல். 2019 - கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 4 அணிகள்

நைட் ரைடர்ஸ் அணி அற்புதமான அணியாக உள்ளது
நைட் ரைடர்ஸ் அணி அற்புதமான அணியாக உள்ளது

ஐ.பி.எல். 12-வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் ரசிகர்கள் இப்பொது இருந்தே ஆர்வமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்திய வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஐ.பி.எல். தொடரில் எட்டு அணிகள் பங்கு பெரும் நிலையில் வரவிருக்கும் சீசனில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நான்கு அணிகளை பற்றிப் பார்ப்போம்.

#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டுள்ளது. இதுவரை இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் இரண்டு முறை இறுதிபோட்டிக்கு சென்று இரண்டு முறையும் கோப்பையை வென்ற ஒரே அணி‌ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்த ஆண்டு ஒரு அற்புதமான அணியாக நைட் ரைடர்ஸ் தன்னை நிலைநிறுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறந்த பேட்ஸ்மேன்கள், மிக சிறந்த ஹிட்டர்களை கொண்டுள்ளனர். கிறிஸ் லின், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன், நித்திஷ் ரானா போன்ற ஹிட்டர்கள், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், கார்த்திக் போன்ற பேட்ஸ்மேன்கள் கொண்டு கே.கே.ஆர். அணி பலமாக உள்ளது.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான பிரத்வேட் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்.

#3 சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி

ஐ.பி.எல்-லில் அனைத்து தொடர்களிலும் வெற்றிகரமான அணியாக சென்னை அணி வலம் வந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான அணியை பெற்றுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கொண்ட கலவையாக உள்ளது சென்னை அணி.

சி.எஸ்.கே. அணியில் இந்திய அணியின் சிறந்த வீரர்களான எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயடு ஆகியோர் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ் மற்றும் டுவேன் பிராவோ, டூ பிளெஸ்ஸிஸ் போன்றவர்கள் ஐ.பி.எல்லில் நன்கு அறியப்பட்ட பெயர்கள். ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா, ஜாதவ், சண்ட்நேர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அணிக்கு ஆற்றுவர்.

#2 ராஜஸ்தான் ராயல்ஸ்

பேன் ஸ்டோக்ஸ்
பேன் ஸ்டோக்ஸ்

ஐ.பி.எல் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில பருவங்களில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. ராயல்ஸ் அணிக்கு நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் திரும்ப வருவது கூடுதல் பலமாக இருக்கும். ஆபத்தான இங்கிலீஷ் வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உள்ளனர். பட்லர் தற்போது சிறந்த டி 20 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

ரஹானே சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருடன் ராஜஸ்தான் அணி சிறப்பாக உள்ளது.

#1 சன்ரைஸஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னரின் வருகை அணிக்கு கூடுதல் பலம்.
டேவிட் வார்னரின் வருகை அணிக்கு கூடுதல் பலம்.

சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி ஐ.பி.எல்-லில் உள்ள அணிகளில் வலுவான அணிகளில் ஒன்று. கடந்த சில பருவங்களில் ஹைதராபாத் அணி சிறப்பாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு கோப்பையை வென்றது.

ஹைதராபாத் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் முந்தைய சீசனில் இல்லாமல் போனது ஹைதராபாத் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இறுதிபோட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

ரஷித் கான் உலகின் மிகச்சிறந்த டி-20 ஸ்பின்னர்களில் ஒருவர். ஹைதராபாத் பௌலிங் டிபார்ட்மென்டின் முதுகெலும்பும் இவரே!

ஜானி பேர்ஸ்டோவ், மார்டின் குப்டில் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற ஏராளமான ஹிட்டர்கள் அணியில் உள்ளனர். மேலும் இந்திய அணியில் மனிஷ் பாண்டே மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கும்.

எழுத்து- சாஞ்சிட் க்ரோவர்

மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்

App download animated image Get the free App now