.உலக கோப்பையில் விளையாட உள்ள இந்தியா பேட்ஸ்மேன்களின் பட்டியல் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் உள்ள சிலர், இந்த ஐபிஎல் சீசனில் பெரிதும் விளையாடவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிலரும் இப்பட்டியலில் இடம் பெறவும் இல்லை. எதுவாக இருந்தாலும் பட்டியலில் உள்ளோர் தங்கள் திறமையை இந்த ஐபிஎல் சீசனில் மேம்படுத்துவது மூலம் உலகக்கோப்பையை நோக்கிய இந்தியாவின் வெற்றி பயணம் அதிகரிக்கும்.
எனினும் ஒரு சில போட்டியாளர்கள் நன்றாகவே விளையாடி வருகின்றனர். அவர்களுள் ஒரு ஐந்து ஆட்டக்காரர்களை பற்றி காண்போம்.
#1.யுஸ்வேந்திர சாஹல்:
ஸ்பின் பவுலரான யுஸ்வேந்திர சாஹல் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த பவுலர் ஆவர். எனவேதான், இவர் உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். 2018 ஐபிஎல்-இல் இவர் பெரிதும் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றபோதிலும், நடப்பாண்டு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஸ்பின் பவுலர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.
ஐபிஎல் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 22.92, ஸ்டிரைக் ரேட் : 17.57, எக்கானமி ரேட்: 7.82, விக்கெட்டுகள்: 14
#2.கே.எல்.ராகுல்:
2018 ஐபிஎல்-லில் அற்புதமாக விளையாடிய கே.எல்.ராகுல், அதன்பின் நடந்த போட்டிகளில் எந்த ஒரு முன்னேற்றங்களும் இல்லை. இருப்பினும் நடப்பாண்டு ஐபிஎல்லில் தன்னுடைய பொறுப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் மீட்டெடுத்து வெற்றி பெற்றுத் தந்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இவரும் கிறிஸ் கெயிலும் சிறப்பான தொடக்கத்தை அமைக்கின்றனர். மேலும், இது உலக கோப்பையில் விளையாடவிருக்கும் ராகுலிற்கு நல்ல ஒரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபிஎல் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 11, நாட் அவுட் : 3, ஆவரேஜ்: 55.12, ஸ்ட்ரைக் ரேட் : 130.08, 50s: 4, 100s: 1, ரன்கள்: 441.
#3.ஜஸ்பிரித் பும்ரா:
ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் அற்புதமான ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இக்கட்டான சூழ்நிலைகளில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை கொண்ட இவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பார்.
இவர் இந்த சீசனில் மும்பை அணியை பல்வேறு சூழ்நிலைகளில் மீட்டு எடுத்துள்ளார். மேலும். ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராக உள்ளார்.
ஐபிஎல் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 19.84, ஸ்டிரைக் ரேட் : 19.23, எக்கானமி ரேட்: 6.19, விக்கெட்டுகள்: 13.
#4.ஹர்திக் பாண்டியா:
காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஹர்திக் பாண்டியா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் பெஸ்ட் ஆல்ரவுண்டராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் பெரிதும் விளையாடவில்லை என்ற போதிலும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இவர் ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தார். அதிரடி ஆட்டக்காரரான இவர், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடந்த அனைத்து போட்டிகளிலும் குறைந்தது 20 - 30 ரன்கள் விளாசியுள்ளார். மேலும் ரசலுக்கு அடுத்ததாக ஸ்டிரைக் ரேட் அதிகமாக வைத்துள்ள ஆல்ரவுண்டரும் இவர்தான்.
ஐபிஎல் பௌலிங் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 11, ஆவரேஜ் : 33.66 , ஸ்டிரைக் ரேட் : 21.00 , எக்கானமி ரேட்: 9.61, விக்கெட்டுகள்: 10.
ஐபிஎல் பேட்டிங் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 12, நாட் அவுட் : 4, ஆவரேஜ்: 50.71, ஸ்ட்ரைக் ரேட் : 198.32, ரன்கள்: 355.
#5. மகேந்திர சிங் தோனி:
2018-இல் நடத்தப்பட்ட போட்டிகளில் போதியளவில் சோபிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் மூன்று அரைச்சதங்களை விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார், தோனி. அதன்பின் இப்போது நடந்து வரும் 2019 ஐபிஎல்லில் இளம் வீரர்களைக் காட்டிலும் அதிரடியாக விளையாடி வருகின்றார். கடந்தாண்டு போலவே நடப்பு ஆண்டும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் சென்னை அணியை மீட்டெடுத்து அதிக வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இவர் தனது பார்மை தக்க வைப்பதன் மூலம் உலகக் கோப்பையில் முக்கியமான துருப்புச்சீட்டாக விளங்குவார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.
ஐபிஎல் புள்ளி விவரங்கள்:
இன்னிங்ஸ்: 7, நாட் அவுட் : 4, ஆவரேஜ்: 104.66, ஸ்ட்ரைக் ரேட் : 137.11, 50s: 3, ரன்கள்: 314.