தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வியுற்றது. இதன் மூலம், புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது, பெங்களூர் அணி. இந்த அணியின் நிகர ரன் ரேட் -0.694 என்று பின்னோக்கிச் சென்றுள்ளது. இன்னும் இரு போட்டிகள் பெங்களூர் அணிக்கு மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ள்து. இருப்பினும், 12 வெற்றி புள்ளிகளே இருந்தாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற முடியும். பெரும்பாலும் இத்தகைய நிகழ்வு நடக்காது என்றாலும் எப்படி இது நிகழும் என்பதை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
ஆட்டம் 48:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பஞ்சாப் அணி சிறிய வெற்றியை பெற வேண்டும் ((பஞ்சாப் அணிக்கு 12 வெற்றி புள்ளிகள்)
ஆட்டம் 49:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் அணி இமாலய வெற்றியை பெற வேண்டும் (பெங்களூரு அணிக்கு 10 புள்ளிகள்)
ஆட்டம் 50:
சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் - எந்த அணியும் வெற்றி பெறலாம்
ஆட்டம் 51:
மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை குவிக்க வேண்டும் (மும்பை அணிக்கு 16 புள்ளிகள்)
ஆட்டம் 52:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொல்கத்தா அணி ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தால் போதும் (கொல்கத்தா அணிக்கு 12 வெற்றி புள்ளிகள்)
ஆட்டம் 53:
டெல்லி கேப்பிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் (டெல்லி அணிக்கு 18 அல்லது 20 வெற்றி புள்ளிகள்)
ஆட்டம் 54:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு அணி இமாலய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும் (பெங்களூர் அணிக்கு 12 வெற்றிகள்)
ஆட்டம் 55:
கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் - சென்னை அணி மிகப்பெரிய வெற்றியை குவித்திருக்க வேண்டும் (சென்னை அணிக்கு 18 அல்லது 20 வெற்றி புள்ளிகள்)
ஆட்டம் 56:
மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் (மும்பை அணி 18 வெற்றி புள்ளிகள்)
இது மட்டுமல்லாமல் பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைக்கும் மற்ற காரணிகள் வருமாறு,
1.ஆட்டம் 50ஐ தவிர சென்னை, டெல்லி மற்றும் மும்பை அணிகள் அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்.
2.பெங்களூர் அணியும் அனைத்து போட்டிகளில் இமாலய வெற்றிகளை குவித்து இருக்கவேண்டும்.
3.கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் ஒரு போட்டிக்கு மேல் வெற்றி பெற்றிருக்க கூடாது.
எனவே, எந்த ஒரு மாற்றமும் நிகழும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் ஒருவேளை மேற்கூறியவாறு நிகழ்ந்தால் பெங்களூர் அணி நிச்சயம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்