ஐ.பி.எல் 2019; மும்பை இந்தியன்ஸ் அணிக்கான முக்கிய வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் சிறந்த அணியாக உள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் சிறந்த அணியாக உள்ளது

நடந்து முடிந்த ஐ.பி.எல் 2019-ஆம் ஆண்டிற்க்கான ஏலத்தில் எதிர்பார்க்காத வீரர் அதிக தொகைக்கும், முக்கிய வீரர்கள் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டும், அறிமுகமில்லாத வீரர்களின் தொகை ஆச்சரியத்தையும் ஏற்ப்படுத்தியது. ஒவ்வொரு அணியிலும் சில முக்கிய வீரர்கள் அணிக்கு வெற்றியை பெற்று தருவார்கள். அனைத்து போட்டிகளிலும் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட முடியாமல் இருப்பார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட போட்டியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சில வீரர்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.

#ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஒரு முக்கிய வீரர் ஆவார்
ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஒரு முக்கிய வீரர் ஆவார்

ஐ.பி.எல் போட்டியின் தொடக்கத்தில் ஒவ்வொரு தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு மையமாக ரோஹித் ஷர்மா இருந்தார். அவர் எந்த இடத்தில் இறங்குவார் என்பது அணியில் வீரர்கள் செயல்பாட்டில் தான் உள்ளது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ஷர்மா மும்பை அணியில் மற்ற வீரர்களின் பேட்டிங் செயல்பாடு மூலம் தனது இடத்தை மாற்றி கொண்டு விளையாடுவார். தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடாத போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவார். மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரில் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று தொடரை வெற்றி பெற உதவினார். எந்த விதமான பந்து வீச்சையும் எதிர்கொண்டு பலமுறை அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த தொடரில் மும்பை அணியின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மா முக்கிய பங்கு வகிப்பார்.

#குர்ணால் பாண்டியா

கடந்த 3 தொடர்களில்மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குர்ணால் பாண்டியா ஒரு தனித்துவமான வீரராக இருந்துள்ளார்
கடந்த 3 தொடர்களில்மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குர்ணால் பாண்டியா ஒரு தனித்துவமான வீரராக இருந்துள்ளார்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த ஆல் ரவுண்டர்களில் முக்கியமானவர் குர்ணால் பாண்டியா. கடந்த சில தொடர்களில் மும்பை அணிக்கு பந்து வீச்சு பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் அணிக்கு நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். அதேபோல தேவைக்கு ஏற்றார்போல அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்து அணிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார். சில போட்டிகளில் விக்கெட்கள் இழந்து நெருக்கடி நேரத்தில் பேட்டிங் மூலம் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார். ஐ.பி.எல் 2017-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஜாஸ்ப்ரிட் பும்ரா

உலகின் சிறந்த பந்து வீச்சாளராக தற்போது பும்ரா இருந்து வருகிறார்
உலகின் சிறந்த பந்து வீச்சாளராக தற்போது பும்ரா இருந்து வருகிறார்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்து வீச்சில் முக்கிய வீரராக இருப்பது இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா. 2013-ஆம் ஆண்டு ஒரு அசாதாரண மற்றும் வித்தியாசமான பந்துவீச்சு செயல்பாடு கொண்டஒரு இளம் வீரர் தற்போது இந்திய அணியில் பந்து வீச்சாளர் தலைவராக உள்ளார். இந்த முன்னேற்றம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி, தேசிய அணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என்பதில் பெருமை கொள்கிறது.

ஒவ்வொரு தொடரிலும் தனது திறமையை அதிகரித்துக்கொண்டே உள்ளார். இவரது கடின உழைப்பு மற்றும் திறமைக்கு தற்போது இந்த நிலையில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பந்து வீச்சில் முக்கிய வீரராக இருப்பார்.

அதேபோல் இன்னும் சில வீரர்களான ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷன், மலிங்கா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

எழுத்து; பிரசாம் பிரதாப்

மொழிபெயர்ப்பு; சுதாகரன் ஈஸ்வரன்