2019 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை செலவிட்டு வீரர்களை விலைக்கு வாங்கிய அணியாக கிங்ஸ் XI பஞ்சாப் அணி உள்ளது. சில அதிரடி டி20 பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் இருந்தும் கடந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. அதிக தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற பஞ்சாப் அணி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்களை அதிக நம்பிக்கையுடன் விலைக்கு வாங்கியது.
இந்த வருட ஐபிஎல் ஏலம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமைந்தது. சிறந்த வீரர்கள் தேர்வு மூலம் அணியை மேம்படுத்தும் நோக்கில் அந்த அணியின் நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்தது. 2019 ஐபிஎல் ஏலத்திற்கு முன் பஞ்சாப் அணி 11 வீரர்களை அணியிலிருந்து நீக்கியது. இதில் ஆரோன் ஃபின்ச், யுவராஜ் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா போன்ற மிகப்பெரிய வீரர்களும் இதில் அடங்கும். அத்துடன் பெங்களூரு அணியிடமிருந்து மந்தீப் சிங்கை வாங்கிக் கொண்டு மார்கஸ் ஸ்டாய்னிஸை அந்த அணியிடம் பரிமாற்றம் செய்து பஞ்சாப் அணி பேட்டிங்கை மேம்படுத்தியுள்ளது.
கிங்ஸ் XI பஞ்சாப் அணி:
பேட்ஸ்மேன்: கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், கரூன் நாயர், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சர்ஃபராஸ் கான்.
ஆல்-ரவுண்டர்கள்: மொய்ஸஸ் ஹன்றிக்யுஸ், ஹார்பிரிட் பிரார், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் குர்ரான்.
விக்கெட் கீப்பர்கள்: லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரான், பிரஸிம்ரன் சிங்
பந்துவீச்சாளர்கள்: முஜிப்யுர் ரகுமான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அன்கிட் ராஜ்பூட், அன்ட்ரிவ் டை, ஹார்டஸ் வில்ஜோன், அர்ஸ்தீப் சிங், வரூன் சக்ரவர்த்தி, தர்ஸன் நல்கண்டே, அக்னிவேஸ் அயாச்சி.
அணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு
மேற்குறிப்பிட்ட பெயர்களில் நிறைய வீரர்களின் பெயர்கள் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக பிரஸிம்ரன் சிங் மற்றும் வரூன் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
கடந்த வருடத்தின் கோடைகாலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை இந்த வருடம் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் இந்திய வீரர்களை அச்சுறுத்திய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான் பஞ்சாப் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். இவர் ஆடும் XI-ல் விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தூணாக இருப்பார்.
கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வலிமையே அந்த அணியின் தொடக்க வீரர்களான ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் மற்றும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தான். கடந்த சீசனில் எதிரணிகளை இவர்களது இயல்பான பேட்டிங்கால் அச்சுறுத்தினர். இவர்கள் நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் இவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.
இரண்டாவது அந்த அணியின் வலிமையாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜிப் யுவர் ரகுமான் திகழ்கிறார். தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசி எதிரணிக்கு நெருக்கடியை அளித்து குறைந்த ரன்களிலேயே மடக்கும் திறமை உடையவர்.
கிங்ஸ் XI பஞ்சாப் அணி முகமது ஷமியை ஏலத்தில் தேர்வு செய்தது சரியான தேர்வாக பார்க்கப்படுகிறது. அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மின்னல் வேக பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்யும்.
அணியின் மதிப்பீடுகள்
பேட்டிங் - 8/10
ஆல்-ரவுண்டர்கள் - 6/10
பௌலிங் - 7/10
இவ்வருட அணித்தேர்வை வைத்து பார்க்கும் போது கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் தனது வராலாற்றை இந்த வருடம் மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: பாரத் ஆர்மி