தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அணிக்கு கோப்பைகளை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் தற்போது அணியில் இல்லாவிட்டாலும் அவரது இடத்தினை சரியாக பூர்த்தி செய்து அணியை சிறப்பாக வழி நடத்தி கடந்த சீசனில் கொல்கத்தா அணியை மூன்றாவது இடத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை தினேஷ் கார்த்திகையே சாரூம்.
இருந்தபோதிலும் கொல்கத்தா அணியில் வேகப்பந்து வீச்சு மட்டுமே குறையாக இருந்தது. முந்தைய தொடரில் மிட்சில் ஸ்டார்க்-கை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தபோதிலும் அவரால் அந்த சீசன் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக டாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டார்.இருந்த போதிலும் மிட்சில் ஜான்சன், டாம் குர்ரான், சார்லஸ் போன்ற பல வெளிநாட்டு பந்து வீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சோபிக்கவில்லை. இதுவே இந்த அணியின் பெரும் பலவீனமாக இருந்தது. இருந்த போதிலும் சுழல் பந்துவீச்சில் குல்தீப் யாதவ்,பியூஸ் சாவ்லா மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். பேட்டிங்-ல் அணி பலம் வாய்ந்ததாகவே திகழ்கிறது
இந்நிலையில் இந்த அணி 2019 ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணிக்கான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை தேடத் துவங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான பிராத்வேட்-யை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன்-யை 1.6 கோடிக்கும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹாரி குர்னே-வை 75 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். மேலும் அதிரடி ஆட்டக்காரரான ஜோ டென்லி, விக்கெட் கீப்பரான நிகில் சங்கர் நாயக் மற்றும் வேகப்பந்து ஆல்ரவுண்டரான அன்ரிச் நெட்டர்ஜி ஆகியோரை தலா 20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்கள் பட்டியல்
அணி விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, கிறிஷ் லின், நிதிஷ் ரானா, சுப்மான் கில், ரின்கு சிங், ஆண்ட்ரியோ ரசில், சுனில் நரேன், பிராத்வேட், சிவம் மவி, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகுர்கோட்டி, பிரசித் கிரிஷ்ணா, பெர்குசன், நோர்ட்ஜி, நிகில் நாயக், ஹாரி குர்னே, பிரித்திவிராஜ் யர்ரா, ஜோ டென்லி, ஶ்ரீகாந்த் முந்தே
இதில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதால் தேர்ந்தெடுப்பது கடினமே இருப்பினும் சிறந்த அணியை இங்கு காண்போம். உத்தேச அணி
டாப் ஆர்டர்(1-3):
கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஷ் லின் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் ஆகியோர் அணிக்கு அதிரடி துவக்கம் தரக்கூடியவர்கள். சுனில் நரேன் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் விளாசக் கூடியவர். ராபின் உத்தப்பா சீனியர் வீரரான இவர் டாப் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்க்கிறார்.
மிடில் ஆர்டர்(4-6)
நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக், சுப்மான் கில் ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி வருகின்றனர். இடது கை பேட்ஸ்மேனான ரானா தனது அதிரடியால் அணியில் ஸ்கோரை உயர்த்தக்கூடியவர். மேலும் இவர் அணிக்கு பவுலிங்கிலும் தனது பங்கை சிறப்பாக செய்யக்கூடியவர். அணிக்கு விக்கெட்டுகள் தேவைப்படும் சமயத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்க்க வல்லவர். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திகின் திறமை நாம் யாவரும் அறித்ததே. சேசிங்-ல் இவர் களத்தில் நிற்கும் வரை அந்த அணிக்கு தோல்வியே கிடையாது. இவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்க விடக்கூடியவர். சுப்மான் கில் இந்திய அணி 19 வயதிற்குற்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் ஆவார். மேலும் இவரது பேட்டிங் திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. மேலும் அணியில் ரிங்கு சிங், நிகில் நாயக் ஆகியோர் சில போட்டிகளில் களமிறக்கப்படலாம்.
ஆல் ரவுண்டர்கள் :
ஆண்ட்ரியோ ரசில் மற்றும் ப்ராத்வேட் ஆகியோர் இந்த வரிசையில் உள்ளனர். இருவரும் பேட்டிங் மற்றும் பந்து வீசுவதில் அபார திறமை பெற்றவர்கள். ரசில் சிக்சர் அடிப்பதில் வல்லவர் பினிசிங்-ல் இவரது பேட்டிங் அணிக்கு பெரிதும் உதவும். ப்ராத்வேட் பற்றி நாம் அறிந்ததே பேட்டிங்-ல் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக கடைசி ஓவரில் 19 ரன்களை வெறும் 4 பந்துகளில் துரத்தி அணிக்கு கோப்பையை கைப்பற்றி தந்தவர்.
பவுலர்கள்:
இவ்வாறாக சிறந்து விளங்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சீசனில் மூன்றாவது முறையாக கோப்பையை கைபற்றும் என ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர். மேலும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களான பெர்குசன், நோர்ட்ஜி, ஹாரி குர்னே ஆகியோரும் களமிறக்கப்படலாம். குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, பிரசாத் கிருஷ்ணா, சிவம் மவி, கமலேஷ் நாகர்கோட்டி போன்ற சிறப்பான பவுலர்களை கொண்டு விளங்குகிறது கொல்கத்தா அணி. இதில் இளம் வீரர்களான கிரிஷ்ணா, மவி மற்றும் நாகர்கோட்டி ஆகியரில் ஏதேனும் இருவரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும்.
மேலும் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களான பெர்குயுசன், நோர்ட்ஜி, ஹாரி குர்னே ஆகியோரும் களமிறக்கப்படலாம்.
இவ்வாறாக சிறந்து விளங்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த சீசனில் மூன்றாவது முறையாக கோப்பையை கைபற்றும் என ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர்.