ஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியை பற்றிய ஒரு அலசல்

Kolkata Knight riders
Kolkata Knight riders

இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் நோக்கில் இந்த வருட ஐபிஎல் சீசனில் களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணி பேட்டிங் அல்லது பௌலிங் என இரண்டிலும் அசத்தும் திறமை கொண்ட அணியாக திகழ்கிறது. ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வீரர்களை வாங்கியது. சற்று அதிக புகழ்பெற்ற அதிரடி வீரர்களை தேடி வாங்கியது.

மொத்தமாக 8 வீரர்களை ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. கர்லாஸ் பிராத்வெய்ட்-ஐ 5 கோடி என்ற பெரிய விலைக்கு ஏலத்தில் எடுத்தது. அத்துடன் லாக்கி பெர்குசன் மற்றும் ஜோ டென்லி ஆகியோரையும் தம் பக்கம் இழுத்துள்ளது கொல்கத்தா அணி.

கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி விவரம்:

பேட்ஸ்மேன்கள் - கிறிஸ் லின், சுப்மன் கில், ரன்கு சிங், நிகில் நாயக், நிதிஷ் ராணா.

ஆல்-ரவுண்டர்கள் - ஜோ டென்லி, ஶ்ரீகாந்த் முந்தி, கர்லஸ் பிராத்வெய்ட், அன்ரிவ் ரஸ்ஸல், பியூஸ் சாவ்லா.

விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா

பௌலர்கள் - சுனில் நரைன், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், பிரஷித் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன், அன்ரீஜ் நோர்டிச், ஹாரி குர்னே, யாரா பிரித்விராஜ், கே.சி கரியப்பா.

அணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு

ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே கொல்கத்தா அணியிலும் அவ்வளவாக மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. இதில் உள்ள வீரர்கள் பல பேர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அசத்தியவர்கள் ஆவர். அத்துடன் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்கள் அதிகம் இந்த அணியில் இடம்பிடித்து உள்ளனர். குறிப்பாக உள்ளுர் கிரிக்கெட்டில் சாதனைகளை தகர்த்தெறியும் சுப்மண் கில் கொல்கத்தா அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார்.

கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோரது தொடக்க பேட்டிங் எதிரணி பௌலர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இருக்கும். நிதிஷ் ராணா மூன்றாவது வீரராக களமிறங்கி அசத்துவார். அத்துடன் ராபின் உத்தப்பா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிபடுத்துவர். இவர்கள் சோபிக்க தவறினாலும் கர்லஸ் பிராத்வெய்ட் மற்றும் ஆன்ட்ரிவ் ரஸ்ஸல் ஆகியோர் இணைந்து டெத் ஓவரில் பெரிய ஷாட்கள் விளாசும் திறமை உடையவர்களாக உள்ளனர். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக ஃபினிஷர் பொறுப்பு மற்றும் ஆட்டத்தை சரியான வழியில் எடுத்துச் செல்வதில் வல்லவர்.

பந்துவீச்சில் பார்க்கும் போது சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் கலக்குவர். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியியின் பிரச்சினை என்னவென்றால் அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளர்கள். நோர்டிச் மற்றும் லாக்கி பெர்குசன் இந்திய மைதானத்தில் சிறப்பாக வீசும் திறமை பெற்றுள்ளனர்.

அணியின் மதிப்பீடுகள்

பேட்டிங் - 8/10

ஆல்-ரவுண்டர்கள் - 8/10

பௌலிங் - 6/10

இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி கோப்பையை தக்க வைக்க முயலுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

நன்றி: பாரத் ஆர்மி

Quick Links