ஐபிஎல் 2019, மேட்ச் 39, RCB vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

MSD vs Virat kholi
MSD vs Virat kholi

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சின்னசாமி மைதானத்தில் 2019 ஐபிஎல் தொடரின் 39வது போட்டியில் இன்று மோத உள்ளன. முதல் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் பெங்களூரு அணி களமிறங்கும் என தெரிகிறது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், பெங்களூரு 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

சின்னசாமி மைதானத்தில் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 7 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

2019 ஐபிஎல் தொடரில் முதல் நேருக்கு நேர்: இவ்வருட ஐபிஎல் தொடரின் மோதிய முதல் லீக் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இடையே மார்ச் 23 அன்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்த ஐபிஎல் சீசனில் தனது இரண்டாவது தோல்வியை தழுவியது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என தெரிகிறது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா

எம்.எஸ்.தோனி இந்த சீசனில் 230 ரன்களை விளாசி சென்னை அணி சார்பாக அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த போட்டியில் பங்கேற்காத இவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது. ஃபேப் டுயுபிளஸ்ஸி (173 ரன்கள்), அம்பாத்தி ராயுடு (163 ரன்கள்) மற்றும் சுரேஷ் ரெய்னா (208 ரன்கள்) ஆகியோர் சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள். பெங்களூரு பௌலர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இவர்களது பேட்டிங் இருக்கும்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர், தீபக் சகார்

இம்ரான் தாஹீர் இந்த சீசனில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தீபக் சகார் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இவருக்கு உறுதுணையாக உள்ளார். ஷர்துல் தாகூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI: ஷேன் வாட்சன், ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், மிட்செல் சான்ட்னர்/டுயன் பிரவோ, இம்ரான் தாஹீர், தீபக் சகார், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Royal challengers Bangalore
Royal challengers Bangalore

பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ரஸலின் அதிரடியை சமாளித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று 3வது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பெங்களூரு களமிறங்கும் என நம்பப்படுகிறது

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல், மொய்ன் அலி

கடந்த போட்டியில் விராட் கோலி (58 பந்துகளில் 100 ரன்கள்) மற்றும் மொய்ன் அலி (28 பந்துகளில் 66 ரன்கள்) ஆகியோரது சிறப்பான பார்ட்னர் ஷிப்பால் 90 ரன்கள் வந்தது. அத்துடன் அந்தப்போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்றது. எனவே இந்த ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இவரது அதிரடி வெளிப்படும் என தெரிகிறது. பார்தீவ் படேல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்ற இரு சிறந்த பேட்ஸ்மேன்கள். இக்கட்டான சூழ்நிலையில் பெரிய ஷாட்களை விளாசும் திறமை உடையவர்கள்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: டேல் ஸ்டெய்ன், யுஜ்வேந்திர சகால்

டேல் ஸ்டெய்ன் கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இனிவரும் போட்டிகளிலும் பெங்களூரு அணியின் துருப்பு சீட்டாக பௌலிங்கில் செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. யுஜ்வேந்திர சகால் (பௌலிங்கில் 3 ஓவர்களில் 45 ரன்கள்) கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீச வில்லை. எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தனது தவறுகளை சரி செய்து கொள்வார் என நம்பப்படுகிறது.

உத்தேச XI: விராட் கோலி (கேப்டன்), பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஏபி டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, வாஷீங்டன் சுந்தர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, யுஜ்வேந்திர சகால், டேல் ஸ்டெய்ன், பவான் நெகி.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now