நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத வருகின்றன. ஏற்கனவே, நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை குவித்து உள்ளது. இதற்கு எதிர் மாறாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெறும் ஐந்து வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இன்றைய போட்டியின் முடிவு பிளே ஆப் சுற்றில் தகுதி பெரும் நிலையிலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு சற்று தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தக்கூடிய இன்றைய போட்டி மொகாலியில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
நேருக்கு நேர்:
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளனர். அவற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 வெற்றிகள் குவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 வெற்றிகளை குவித்துள்ளது.
முக்கியமான வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 19 போட்டிகளில் களமிறங்கி 358 ரன்களை குவித்துள்ளார், மகேந்திர சிங் தோனி. மேலும், இவரது பேட்டிங் சராசரி 119 என்ற அளவில் அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்லும் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், மகேந்திரசிங் தோனி. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை இவர் கொண்டுள்ளார்.
கே.எல்.ராகுல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விளையாடி ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். எனவே, இன்றைய போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்தால் தொடர்ந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதன் மூலம், ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஷேன் வாட்ஸன், பாப் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாகர், ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கிறிஸ்கெய்ல், ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரண், மந்தீப் சிங், சாம் கரண், ரவிச்சந்திரன் அஸ்வின், முருகன் அஸ்வின், முகமது சமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆண்ட்ரூ டை.