ஐபிஎல் 2019: மேட்ச் 18, CSK vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

MSD vs Ravichandran Ashwin
MSD vs Ravichandran Ashwin

2019 ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இரு அணிகளும் 20 ஐபிஎல் லீக் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளிலும், கிங்ஸ் XI பஞ்சாப் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக 5 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஓரளவிற்கு ரன்கள் குவிக்கும் வகையில் இருக்கும். சென்னை அணிக்கு சம அளவில் பஞ்சாப் அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai super kings
Chennai super kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்துள்ளது. எனவே சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கேதார் ஜாதவ் (54 பந்துகளில் 58 ரன்கள்) மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அடுத்த சிறந்த பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா 16 ரன்களை மட்டுமே கடந்த போட்டியில் எடுத்தார். மோசமான பேட்டிங்கால் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வலிமையான அணியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாத்தி ராயுடு தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். எனவே அணி நிர்வாகம் இவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அல்லது டுயுபிளஸ்ஸி களமிறக்க திட்டமிடும்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஹர்பஜன் சிங்

இம்ரான் தாஹீர் மற்றும் டுயன் பிரவோ ஆகியோர் சென்னை அணியின் டாப் பௌலர்களாக உள்ளனர். டுயன் பிரவோவிற்கு காயம் காரணமாக இரு வாரங்களுக்கு ஓய்வழிக்கப்பட்டுள்ளது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பு இம்ரான் தாஹீருக்கு மேலும் அதிகரித்துள்ளது.

இம்ரான் தாஹீர் மற்றும் தீபக் சகார் பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்களாக திகழ்கின்றனர். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானது என்பதால் கேப்டன் தோனி , ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆடும் XI-ல் சேர்ப்பார்.

ஹர்பஜன் சிங் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு முக்கிய பௌலராக செயல்பட்டார். ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் களமிறக்கப்படலாம்.

உத்தேச XI: அம்பாத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், தீபக் சகார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர்/மோஹீத் சர்மா.

கிங்ஸ் XI பஞ்சாப்

Kings XI Punjab
Kings XI Punjab

கிங்ஸ் XI பஞ்சாப் அணி இவ்வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது‌. 4 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக களமிறங்கவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் களமிறங்குவது சந்தேகத்திலே உள்ளது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: லோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், சஃப்ரஸ் கான்

கிறிஸ் கெய்ல் அணியில் இடம்பெறாததால் கே.எல்.ராகுலுக்கு பேட்டிங்கில் நிலைத்து விளையாடும் பொறுப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் சாம் கர்ரான் ஒரு அதிரடி ஆட்டத்தை கடந்த போட்டியில் தொடக்கத்தில் களமிறங்கி அசத்தினார். ராகுலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கர்ரான் 20 ரன்களை விளாசித் தள்ளினார்.

மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த போட்டியில் சற்று தடுமாறிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ் கெய்ல் ஃபிட்டாக இருந்தால் மந்தீப் சிங்கிற்கு பதிலாக களமிறக்கப்படுவார்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: சிம் கர்ரான், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின்

சாம் கர்ரான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் அவரது முதல் ஐபிஎல் ஹாட்ரிக்-கும் அடங்கும். ஆல்-ரவுண்டரான இவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் கடும் நெருக்கடியை அளிப்பார்.

முகமது ஷமி(5 விக்கெட்டுகள்) மற்றும் ஹர்துஸ் வில்ஜியோன் (4 விக்கெட்டுகள்) ஆகியோர் பவர் பிளேவில் ரவிச்சந்திரன் அஸ்வினின் துருப்பு சீட்டாக உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் முருகன் அஸ்வின் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் சற்று பிரம்மாண்டமாகவே இருக்கும்.

உத்தேச XI: கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கர்ரான், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, முஜிப் யுர் ரகுமான்.

Quick Links