ஐபிஎல் 2019: 3வது போட்டி - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்; முன்னோட்டம் மற்றும் உத்தேச XI

Rohit Sharma vs Shreyas Iyer
Rohit Sharma vs Shreyas Iyer

2019 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் இன்று(மார்ச் 24) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

2018 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி அட்டவணையில் 5வது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்தையும் பிடித்தன. கடந்த வருட ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகள் மோதிய லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி இரு போட்டியிலும் வென்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதி தலா 11 போட்டிகளில் இரு அணிகளும் வென்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு கோப்பையை கூட வாங்கியது இல்லை.

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். மஹேலா ஜெயவர்த்தனே அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் கோச்சாக ராபின் சிங், பௌலிங் கோச்சாக ஷேன் பாண்ட் உள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார்.

நாம் இங்கு இரு அணிகளின் முக்கிய நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI பற்றி காண்போம்

அணி விவரம்:

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிசான், சூர்ய குமார் யாதவ், ஈவின் லிவிஸ், பொல்லார்ட், யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, க்ருநால் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, சிதிஸ் லாட், மயன்க் மார்கண்டே, அன்குல் சுதாகர் ராய், ஜேஸன் பெஹாரன்ஆஃப், ராகுல் சகார், பென் கட்டிங், ஆதித்யா தாரே, ராஸிக் சலாம், அன்மோல்ப்ரிட் சிங், பரீந்தர் ஸ்ரன், லாசித் மலிங்கா, மிட்செல் மெக்லகன், குவின்டன் டிகாக், பன்கஜ் ஜெஸ்வால், ஆடம் மில்னே(தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்)

டெல்லி கேபிடல்ஸ்:

ஷிகார் தவான், ஸ்ரேயஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, காலின் இன்கிராம், மன்ஜொட் கல்ரா, ஜலாஜ் சக்சேனா, ஷேர்ஃபேன் ரூதர்போர்ட், ஹனுமா விகாரி, காலின் முன்ரோ, இஷாந்த் சர்மா, நாத்து சிங், ட்ரென்ட் போல்ட், சந்தீப் லாமிச்சனே, காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ஏவிஸ் கான், ஹர்சல் படேல், ராகுல் டிவாதியா, ஜெயந்த் யாதவ், பந்தாரு ஐயப்பா, கீமோ பால், அக்ஸர் படேல், கிறிஸ் மோரிஸ், அன்குஸ் பெய்ன்ஸ், ரிஷப் பண்ட்.

நட்சத்திர வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் பேட்டிங்கில் 260 ரன்களை எடுத்தார். உலகக் கோப்பைக்கு முன் நடந்த இந்த ஐபிஎல் தொடர் ஹர்திக் பாண்டியா-விற்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் - சந்தீப் லாமிச்சனே

சந்தீப் லாமிச்சனே தற்போதைய கிரிக்கெட்டின் அற்புதமான சுழற்பந்து வீச்சாளர். கடந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமீபத்தில் முடிந்த பிக் பாஷ் மற்றும் பி.எஸ்.எல் ஆகிய தொடரில் தலா 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய சிறப்பான ஆட்டத்திறன் ஐபிஎல் தொடரிலும் தொடரும் என நம்பப்படுகிறது.

உத்தேச XI:

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக், சூர்ய குமார் யாதவ்/இஸான் கிசான், யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லகன், ஜாஸ்பிரிட் பூம்ரா, மயன்க் மார்கண்டே.

டெல்லி கேபிடல்ஸ்: ஷிகார் தவான், பிரித்வி ஷா, காலின் முன்ரோ/ஷேர்ஃபான் ரூதர்போர்ட், காலின் இன்கிராம், ஸ்ரேயஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்சல் படேல், இஷாந்த் சர்மா, ட்ரென்ட் போல்ட், சந்தீப் லாமிச்சனே.

Quick Links

App download animated image Get the free App now