Create
Notifications

ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் 

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
Sarath Kumar
ANALYST
Modified 20 Mar 2019
சிறப்பு

ஐபிஎல் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் மிகவும் முக்கியமான அணியென்றால் மும்பை அணியையும் கூறலாம். ஜாம்பவான் சச்சின் அவர்களை முன்மொழிந்து தொடங்கப்பட்ட அணியை, தற்போது அதே உத்வேகத்துடன் வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா. இதற்கு சான்று மூன்று முறை கோப்பையை வென்றதுதான். ஆனால் இந்த அணியானது தொடக்க கட்டத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்து பிறகு எப்படியாவது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுகிறது. இந்த வருட ஐபிஎல் தொடரில் அதை களையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த வருட ஏலத்தில் பெரிய அளவில் இல்லாமல், ஒரு வகையில் ஆச்சர்யமூட்டும் விதமாக யுவராஜ் சிங்கை எடுத்தது. மேலும் டீ காக்கை பெங்களூர் அணியிடம் இருந்து வாங்கியது கூடவே பௌலிங் ஆலோசகராக பணியாற்றிய மலிங்காவை மீண்டும் ஏலம் எடுத்தது. டுமினி, முஸ்தபிஸுர் ரஹ்மான் போன்ற வீரர்களை வெளியே விட்டது.

அணி விபரங்கள்:

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

பேட்ஸ்மேன்கள்:

ரோஹித் சர்மா, அன்மோல்ப்ரீட் சிங், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லட், ஏவின் லீவிஸ்.

விக்கெட் கீப்பர்கள்:

டீ காக், இஷான் கிஷான், ஆதித்யா தாரே.

ஆல்ரவுண்டர்கள்:

பி.ஐஸ்வால், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, யுவராஜ் சிங், அனுகூல் ராய், கிரென் பொல்லார்ட், பென் கட்டிங்.

பௌலர்கள்:

மயங்க் மார்கண்டே, ராகுல் சஹார், பரிந்தர் சரண், லசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ராஹ், மேக்லெனகன், ஆடம் மில்ன், ஜேசன் பேரென்டாப், ஜெயந்த் யாதவ், ராசிக் தார்.

அணியின் கலவை:

மும்பை அணியை பொறுத்தவரை மற்ற அணிகளை காட்டிலும் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் கொண்ட அருமையான குழுவாக காட்சியளிக்கும். ஆனால் அணியின் துவக்க வீரர்கள் சரியாக அமையாத காரணத்தால் தோல்வியை சந்திக்க வேண்டியதாக உள்ளது. காரணம் ரோஹித் சர்மா நடு வரிசையில் களமிறங்குவதால் தான். தற்போது அதற்கு தீர்வாக யுவராஜ் சிங்கை எடுத்துள்ளதாக அணி நிர்வாகம் நம்புகிறது. இதனால் இந்த முறை ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவது உறுதி.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

துவக்க வீரர்கள்:[1,2]

டீ காக்/ஏவின் லீவிஸ், ரோஹித் சர்மா.

பலம்: டீ காக் மற்றும் ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கும்பொழுது, மும்பை அணி ஒரு முழுமையான அணியாக காட்சியளிக்கும். ரோஹித் தொடக்க வீரராக பல சாதனைகளை குவித்துவருவது அனைவரும் அறிந்ததே. கூடவே இடதுகை பேட்ஸ்மேன் ஆன டீ காக் களமிறங்கும் பொழுது தவானுடன் களமிறங்குவது போல் உணர்வார். காரணம் டீ காக் ஒரு சிறந்த வீரர் அவர் எளிதாக தனது விக்கெட்டை விட்டு கொடுக்க மாட்டார். மேலும் தற்போது இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருகிறார். இவர் இல்லாத பட்சத்தில் அதிரடிக்கு பேர் போன லீவிஸ் களமிறங்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷன், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்க மாற்றுவீரர்களாக உள்ளனர்.

பலவீனம்: பலவீனம் என்று கூறும் பட்சத்தில் லீவிஸ் பற்றி கூறலாம். அவர் அதிரடியாய் ரன்கள் குவித்தாலும் சுழற்பந்தில் திணறுகிறார். எனவே ரோஹித் மற்றும் டீ காக் கடைசி வரை சீராக ரன்கள் குவிக்க வேண்டும்.

துவக்கவீரர்கள் மதிப்பெண்: 8.5/10

1 / 3 NEXT
Published 20 Mar 2019
Fetching more content...
App download animated image Get the free App now