ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் 

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

மிடில் வரிசை வீரர்கள்: [3,4]

யுவராஜ் சிங், சூர்யாகுமார் யாதவ், இஷான் கிஷான் என மூவர்களில் இருவர்கள்.

மும்பை ஜெர்ஸியில் யுவராஜ் சிங்
மும்பை ஜெர்ஸியில் யுவராஜ் சிங்

பலம்: பலமென்றால் அனைவரும் டி20 அனுபவம் வாய்ந்தவர்கள். இஷான் கிஷான் கடந்த இரு உள்நாட்டு தொடர்கள், மற்றும் இந்தியா A அணிக்காக பலமுறை சாதித்துள்ளார். மேலும் கடந்தமுறை அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்து அசத்தினார். யுவராஜ் சிங் அனுபவம் அணிக்கு கை கொடுக்கலாம்.

பலவீனம்: சமீபகாலமாக மிடில் வரிசையில் ரன்களை குவிக்க திணறுகின்றார் யுவராஜ் சிங். மேலும் இவர் சொதப்பும் பட்சத்தில் மிடில் வரிசையில் அனுபவமில்லாத சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான்க்கு அழுத்தம் வர வாய்ப்புள்ளது.

மிடில் வரிசை வீரர்கள் மதிப்பெண்: 7/10

பினிஷெர்கள்:[5,6,7,8]

கெய்ரன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பென் கட்டிங்.

பாண்டியா சகோதர்கள்
பாண்டியா சகோதர்கள்

பலம்: சிறந்த ஆல்ரவுண்டர்கள் கொண்ட அணிகள் கணக்கிட்டால் மும்பை அணியும் அதில் முக்கிய இடத்தில இருக்கும். பாண்டியா சகோதர்கள், பொல்லார்ட், கட்டிங் ஆகியோர் அதிரடி மாயாஜாலம் காட்டுவதில் வல்லவர்கள். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, மேலும் அனைவரும் சிறந்த பீல்டெர்கள் என்பது கூடுதல் பலமாகும். கட்டிங் மற்றும் பொல்லார்ட் தற்போது நடந்த பிபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களில் விளையாடி நல்ல பார்மில் உள்ளனர். இது அந்த அணிக்கு புத்துணர்ச்சி தரலாம்.

பலவீனம்: அதிரடி ஆட்டம் என்றாலே விக்கெட்டை இழப்பது வாடிக்கையான ஒன்று. அப்படி விக்கெட் விழும் பட்சத்தில் சரிவுகள் தொடங்க வாய்ப்புள்ளது.

பினிஷெர்கள் மதிப்பெண்: 8.5/10

Quick Links