ஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய ஒரு அலசல் 

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

பௌலர்கள்:[9,10,11]

மயங்க் மார்கண்டே, மலிங்கா/மெக்லெனகன், பும்ராஹ்/பரிந்தர் சரண் .

மலிங்கா மற்றும் பும்ராஹ்
மலிங்கா மற்றும் பும்ராஹ்

பலம்: மும்பை அணியின் அடையாளமாக பார்க்கப்படுவது மலிங்கா மற்றும் பும்ராஹ் தான். ஐபிஎல்லில் மும்பை அணிக்காக இவர்களின் பங்கு அளப்பரியது. இருவரும் சேர்ந்து கலக்கும் பட்சத்தில் எதிரணிக்கு ஆபத்து தான். மயங்க் மார்கண்டே சென்ற முறை சிறப்பாக செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடக்கை பந்துவீச்சாளர்கள் வேண்டும் பட்சத்தில் மலிங்காவிற்கு பதிலாக மெக்லெனகன் கலக்கலாம். உலக கோப்பையை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஓய்வு தரும் பட்சத்தில் பரிந்தர் சரண் களமிறங்கலாம்.

பலவீனம்: இந்த அணியின் பலவீனம் சுழற்பந்து வீச்சாளர்கள் தான். மார்கண்டே மற்றும் ராகுல் சஹார் மட்டுமே உள்ளனர். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மிகவும் அவசியம். அந்த சமயத்தில் இவர்கள் எவ்வாறு செயல்படுவர் என்பது கேள்விக்குறியே. மேலும் மலிங்கா பழையபடி செயல்படுவது கொஞ்சம் சந்தேகம் தான்.

கடந்த முறை தோல்விக்கான காரணமாக பார்க்கபட்டது டெத் பௌலிங் தான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்தபிஸுர் ரஹ்மான் சொதப்ப நிலைமை மோசமானது. இந்த முறை பும்ராஹ்வுடன் சேர்ந்து மலிங்கா தனது பழைய பார்மில் கலக்கினால் மட்டுமே ரன்களை கட்டுப்படுத்த முடியும்.

பௌலர்கள் மதிப்பெண்: 7.5/10

ஒட்டுமொத்தமாக இந்த அணியை ஆராயும்பொழுது கோப்பையை வெல்ல தகுதிவாய்ந்த அணி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ரோஹித்தின் கேப்டன்சி, பாண்டியா சகோதர்களின் துடிப்பான ஆட்டம் மற்றும் பும்ராஹ்வின் டெத் பௌலிங் ஆகியவை கைகொடுக்கும் பட்சத்தில் நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதிக்கலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil