கடந்த ஐபிஎல் தொடரில் இரு வருட தடைக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியது 2 அணிகள். இதில் ஒரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றது. மற்றொரு அணி அரையிறுதியில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. ஆம்,கடந்த ஐபிஎல் சீசனில் சற்று சுமாரான ஆட்டத்திறனுடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று நாக் அவுட் சுற்றில் வெளியேறியது. கடந்த வருடத்தில் ஐபிஎல் ஏலத்தில் அதிரடி வீரர்களாக வாங்கி குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஜெய்தேவ் உனட்கட் ராஜஸ்தான் அணியால் மீண்டும் 8.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். 2019 ஐபிஎல் ஏலத்தில் 9 வீரர்களை வாங்கியது ராஜஸ்தான் அணி. பெரும்பாலும் மாற்று ஆட்டக்காரர்கள் மற்றும் வேகப் பந்து வீச்சை மேம்படுத்தவே இந்த 9 வீரர்களையும் வாங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
பேட்ஸ்மேன்கள் - அஜின்க்யா ரகானே, ஸ்டிவன் ஸ்மித், மனன் வோஹ்ரா, ஆர்யமான் பிர்லா, ராகுல் தீர்பாதி, ஷஷன்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பரக்.
ஆல்-ரவுண்டர்கள் - பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி, சுபம் ரன்ஜனே, ஆஸ்டன் டர்னர், மஸிபால் லேம்ப்ரோர், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கௌதம்.
விக்கெட் கீப்பர்கள் - ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பிரசாந்த் சோப்ரா.
பந்துவீச்சாளர்கள் - ஸ்சோதி, ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி, வரூன் ஆரோன், ஓஸானே தாமஸ், சுதேசன் மிதுன்.
அணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு
தற்போது அனைத்து இடங்களிலும் சரியான வீரர்களை கொண்ட சிறந்த அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திகழ்கிறது. ஆனால் உலகக் கோப்பை தொடர் வரவிருப்பதால் ஐபிஎல் தொடரின் பாதியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி விடுவர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த வீரரான ஸ்டிவன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்ப கண்டிப்பாக ஐபிஎல் தொடர் கைகொடுக்கும். இந்த அணி கண்டெடுத்துள்ள உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான ராகுல் தீர்ப்பதி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் கடந்த சீசனில் சிறந்த ஆட்டத்திறனுடன் ஜொலித்தனர்.
ஜொஃப்ரா ஆர்சர் டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு, ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இந்தியாவிற்கு எதிரான சர்வதேச டி20யில் சிறப்பான வேகத்தில் வீசிய ஒஸானே தாமஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் அணியில் ஸ்டுவர்ட் பின்னி ஒரு தீர்க்கமான காரணியாக திகழ்கிறார். சமீபத்தில் முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டு ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற ஆஸ்டன் டர்னர் இந்த அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். அனைவரது கவனமும் இவரது ஆட்டத்தையே எதிர்நோக்கியுள்ளது.
அனுபவ ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூணாக உள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் அசத்திய ஜாஸ் பட்லர் இந்த தொடரிலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக திகழ்கிறார்.
2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்க்யா ரகானே தனது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ஜொலிப்பார் என தெரிகிறது.
அணியின் மதிப்பீடுகள்
பேட்ஸ்மேன்கள் - 6/10
ஆல்-ரவுண்டர்கள் - 6/10
பந்துவீச்சாளர்கள் - 7/10
நன்றி: பாரத் ஆர்மி