2019 ஐபிஎல் தொடரின் 42 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர், பஞ்சாப் அணி டெல்லி அணியிடம் தோல்வி பெற்றிருந்தது. இதற்கு எதிர்மாறாக, பெங்களூர் அணி சென்னை அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணியிடம் தோல்வி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கு பஞ்சாப் அணி நெருக்கடிக்கு உள்ளாகும். அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் சீராக ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி வருகின்றனர். இந்த அணியில் உள்ள மிகப்பெரும் கவலையை மிடில் ஆர்டர் பேட்டிங் தான். இந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிலை வரும் குழப்பங்களை தவிர்த்து, வெற்றிப் பாதைக்கு திரும்பவும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் இந்த வெற்றி உதவிகரமாக இருக்கும்.
எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள பஞ்சாப் அணி மேற்கொள்ள உள்ள இரு மாற்றங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
#1.ஹர் பிரித்பாருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான்:
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பவுலிங் ஆல்ரவுண்டர் பார் இடம் பெற்றிருந்தார். எனினும், இவர் எந்த ஒரு தாக்கத்தையும் அந்த போட்டியில் ஏற்படுத்தவில்லை. இந்த ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுவதால், சர்பராஸ் கானுக்கு உகந்த மைதானம். எனவே, இவர் ஆடும் லெவனில் நிச்சயம் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், அணியில் நிலவி வரும் மிடில் ஆர்டர் கவலை ஒருவழியாக தீரும்.இதற்கு முன்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அணியில் இடம்பெற்றிருந்த சர்ஃபராஸ் கான் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.
#2.சாம் கரனுக்கு பதிலாக முஜிப் ரகுமான்:
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார், மாயஜால சுழற்பந்துவீச்சாளர் முஜிப் ரகுமான். கடந்த லீக் ஆட்டங்களில் இடம்பெற்று வரும் ஆல்ரவுண்டரான சாம் கரன் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட வேண்டும். இவருக்கு பதிலாக முஜிப் ரகுமான் அணியில் இணைக்கப்பட்டால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு கூடுதல் பலம் பெறும். பவர் பிளே ஓவர்களில் சிறப்பான சுழற்பந்து வீச்சு தாக்குதலை தொடுப்பதில் முஜிப் ரகுமான் சிறந்தவர் என்பதால், அஸ்வின் இவரை பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டத்தில் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். மேலும், டி20 வடிவிலான போட்டிகளில் முஜிப் ரகுமான் வெற்றியை தீர்மானிக்க கூடிய வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
எனவே, மேற்கண்ட இரு மாற்றங்களை செய்தால், பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெறும்.