ஐபிஎல் தொடரில் அமைதியான முறையில் ஒரு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிற அணியென்றால் அது சன்ரைசர்ஸ் அணி எனலாம். இதற்கு முழு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர்களான டாம் மூடி, லட்சுமண் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரையே சேரும். சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத் அணி சன் நெட்வொர்க் குழுமத்திற்கு கைமாறியது. அன்று முதல் அந்த அணிக்கு ஏறுமுகம் தான். அந்த அணிக்கு பக்கபலமாக இருந்துவருவது அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் தான். சிறிய தடைக்கு பிறகு இந்தாண்டு அவர் களம் காண்பது அந்த அணிக்கு பலம்தான்.
வீரர்கள் விபரம்:
இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய முடிவுகளை அதிரடியாய் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம். அணி தூணான ஷிக்கர் தவான்-ஐ வெளியே விட்டது அந்த அணி. அதற்கு பதிலாக விஜய் ஷங்கர், ஷபாஸ் நதீம் உட்பட மூன்று வீரர்களை டெல்லி அணியிடம் வாங்கியது. மேலும் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் வகையில் மார்ட்டின் குப்தில், மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரை வாங்கியுள்ளது.
பேட்ஸ்மேன்கள்:
டேவிட் வார்னர், மார்ட்டின் குப்தில், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, ரிக்கி புய்.
விக்கெட் கீப்பர்கள்:
ஜானி பேர்ஸ்டோவ், விரிதிமான் சாஹா மற்றும் எஸ்.கோஸ்வாமி.
ஆல்ரவுண்டர்கள்:
தீபக் ஹூடா, யூசுப் பதான், சாகிப் உல் ஹசான், அபிஷேக் சர்மா, விஜய் ஷங்கர், முகமத் நபி.
பௌலர்கள்:
ரஷீத் கான், சபாஷ் நதீம், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, டி.நட்ராஜன், சித்தார்த் கவுல், கலீல் அஹ்மத், பில்லி ஸ்டாண்லெக், பேசில் தம்பி.
அணியின் கலவை:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை அந்த அணியின் பலம் என்றால் அது பௌலர்கள் தான். மேலே வீரர்கள் விபரத்தை பார்த்தாலே புரியும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பலம். அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வீரரும் தனி ஆளாக வெற்றி தேடி தருவதில் வல்லமை மிக்கவர்கள். அனால் பேட்டிங்கை பொறுத்தவரை வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.
தொடக்க வீரர்கள்:[1,2]
டேவிட் வார்னர், மார்ட்டின் குப்தில் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்.
பலம்: இவர்கள் மூவருமே அனுபவம் வாய்ந்த டி20 பேட்ஸ்மேன்கள் தான். அவர்களது ஸ்ட்ரைக் ரேட் அபாயகரமானது. மதுமட்டுமில்லாமல் தனது தேசிய அணிக்காக களமிறங்கி பல வெற்றிகளை குவித்துள்ளனர்.
பலவீனம்: இதில் பலவீனம் என்று கூறினால் அதற்கு ஒரே காரணம் மூவரும் வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் வார்னரை தவிர்த்து இந்திய ஆடுகளங்களில் பெரிதாக யாரும் சாதித்ததில்லை. குப்தில் பல ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றும் சோபிக்க தவறியுள்ளார். மேலும் பேர்ஸ்டோவிற்கு இதுவே முதல் ஐபிஎல் தொடராகும்.
இந்த தொடக்க ஜோடிக்கு மாற்றாக இந்திய வீரக்கள் இல்லாதது மட்டுமின்றி இவர்களை தவிர்த்து அனுபவ வீரர்கள் யாருமே அணியில் இல்லை.
எனவே இந்த தொடக்க இணைக்கு அளிக்கப்படும் மதிப்பெண்: 7/10.
மிடில் வரிசை வீரர்கள்:[3,4,5]
வில்லியம்சன்/சாகிப் உல் ஹசான், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர்.
பலம்: மிடில் வரிசை வீரர்களை பார்க்கும் பொழுது சரியான கலவையில் தான் உள்ளது எனலாம். வில்லியம்சன் காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார். அவர் இல்லாத பொழுது சாகிப் அவர் இடத்தை நிரப்புவார். மேலும் மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர் அணிக்கு சரியான வகையில் உள்ளனர்.
பலவீனம்: இதில் பலவீனம் என்று சொல்வது ஒன்றை மற்றுமே அணைத்து வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் சராசரியானது தான். பெரிய தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
மிடில் வரிசை மதிப்பெண்: 7.5/10
பினிஷெர்கள்: [6,7,8]
தீபக் ஹூடா, யூசுப் பதான், முகமத் நபி/சபாஸ் நதீம்.
பலம்: கொல்கத்தா அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் பல வெற்றிகளை தேடி கொடுத்த யூசுப் பதான் பலம். நபி ஆப்கானிஸ்தான் அணியின் தூணாக பல போட்டிகளை வென்று தந்துள்ளார். ஹூடா ஒரு சிறந்த இளம் வீரர்.
பலவீனம்: யூசுப் பதன் சிறந்த வீரராக இருந்தாலும் அவர் இப்போதைய நிலையில் எப்படி செயல்படுவார் என்பது கடினம். மேலும் ஹூடாவின் அனுபவம் ஒரு கேள்விக்குறி. நபி ஒரு சிறந்த வீரர் தான் ஆனால் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே களமிறக்கபடுவதால் அவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியே.
பினிஷெர்களின் மதிப்பெண்: 6/10
பௌலர்கள்: [9,10,11]
ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்/கலீல் அஹ்மத்.
பலம்: அந்த அணியின் மொத்த பலமும் கடைசி மூன்று நபர்களை சார்ந்துள்ளது. ரஷீத் கான் ஐபிஎல்-ன் நாயகன், புவனேஷ்வர் குமார் கடைசி கட்ட ஓவர்களின் நாயகன், சித்தார்த் கவுல் மற்றும் கலில் அஹ்மத் சிறந்த இளம் வீரர்கள், இவர்களை தவிர்த்து சந்தீப் சர்மா, பசில் தம்பி ஆகியோரும் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களாக பில்லி ஸ்டான்லெக் உள்ளார். அதிலும் ரஷீத் கான், மற்றும் புவனேஷ்வர் குமார் பேட்டிங்கிலும் கை கொடுப்பர். 120 ரன்கள் குவித்தாலும் எதிரணியை சுருட்டுவதில் இவர்கள் இருவரும் வல்லவர்கள். அதை கண்கூடாக நாம் பார்த்ததும் உண்டு.
பலவீனம்: பெரிதாக பலவீனம் என்று சொல்வதற்கு இல்லை.
பௌலர்கள் மதிப்பெண்: 9.5/10
ஒட்டுமொத்தமாக இந்த அணியை பார்க்கையில், ஐபிஎல் கோப்பை வெல்ல சரியான அணி எனலாம். ஆனால் ஒரு விஷயம் தான் உறுத்தலாக உள்ளது, வெளிநாட்டு வீரர்களை சரியாக பயன்படுத்துவது தான் அது. சில சமயம், வில்லியம்சன் கூட இல்லாமல் அந்த அணி களமிறங்கலாம்.
மேலும் ஏப்ரல் 23 ஆஸ்திரேலியா வீரர்கள்- வார்னர். மே -1 பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்- சாகிப், நபி, ரஷீத் கான் ஆகியோர் தங்களது தேசிய அணிக்காக விளையாட செல்வதால். கடைசி கட்டத்தில் அந்த அணி தத்தளிப்பது நிச்சயம்.
ஐபிஎல்-இல் இதுவரை : 2013- நான்காவது இடம், 2014- ஆறாவது இடம், 2015- 6th, 2016- சாம்பியன், 2017- நான்காவது இடம், 2018- இரண்டாவது இடம்.