நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ஏனெனில், எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. இந்த நீண்டகால தொடரில் சில அற்புதமான ஷாட்கள் அரங்கேறிய வண்ணம் இருந்தன. அதுபோன்ற மூன்று அற்புதமான ஷாட்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஏ.பி.டிவில்லியர்ஸ்ஸின் ஒரு கையால் அடிக்கப்பட்ட சிக்சர்:
"சூப்பர் மேன்" என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ், சிக்சர்களை அடிப்பதில் சிறந்த வீரர். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முகமது சமி வீசிய 19வது ஓவரில் தன்னை நோக்கி வந்த பந்தை சிக்ஸருக்கு அடித்தார். இந்த பந்தை அடிக்கும் போது இவரது இடது கை மட்டும் பேட்டை தூக்கியபடி சிக்ஸர் அடித்தது. மிஸ்டர் 360 டிகிரீ என்று வர்ணிக்கப்படும் இவர், ஒற்றைக் கை சிக்ஸர் அடித்து ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.
#2.ஹர்திக் பாண்டியாவின் தோணி போன்ற ஹெலிகாப்டர் ஷாட்:
ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில், "ஹெலிகாப்டர்" ஷாட்களை தோனி ஒருவர் மட்டுமே அடிப்பார் என்று ரசிகர்கள் நம்பி வந்தனர். ஆனால், இதனை மறுக்கும் வகையில் ஹர்திக் பாண்டியா 2019 ஐபிஎல் தொடரில் பல ஹெலிகாப்டர் ஷாட்களை அடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தார். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் கண் முன்னே இந்த ஷாட்டை அடித்து அமர்க்களப்படுத்தினார். பலமுறை வலைப்பயிற்சியில் தோனி ஈடுபடும்போது, இவ்வாறான ஷாட்களை பயிற்சி செய்வதை தொடர்ந்து கண்காணித்து வந்த ஹர்திக் பாண்டியா, அதனை தற்போது கற்றுக் கொண்டுள்ளார்.
#1.ரவீந்திர ஜடேஜா தரையில் படுத்து விளாசிய ஷாட்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஸ்டிரைக்கில் நின்றுகொண்டிருந்தார். அணியின் கேப்டன் தோனி நான்-ஸ்ட்ரைக்கில்இருந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் தமது முழு பலனை வெளிப்படுத்திய ஜடேஜா, சிக்ஸரை அடித்து தரையில் விழுந்தார். ஒரு வழியாக அவர் அடித்த ஷாட் சிக்சர் போன போதும் இருவேறு வேடிக்கையான விஷயங்கள் அரங்கேறின.
1.கீழே விழுந்த போது அவருடன் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸும் தரையில் விழுந்தார்.
2.நான்-ஸ்ட்ரைக்கில் நின்றுகொண்டிருந்த தோனி, ஜடேஜா அடித்த சிக்ஸரை கண்டுகொள்ளாமல் ரன் ஓடினார். அப்போது ஜடேஜா கீழே விழுந்திருந்ததால், தோனி தன் பேட்டால் செல்லமாக இருமுறை ஜடேஜாவின் ஹெல்மெட்டை நோக்கி அடித்தார்.