12வது ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் 8 ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்துள்ளன. புள்ளி அட்டவனையில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெற்றதற்கு ஏற்ற முறையில் இடம்பிடித்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் முதல் இரு இடங்களை வகிக்கின்றன. இரண்டு போட்டிகளில் பங்கேற்று 2 போட்டியிலும் வென்று மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றியை கூட இந்த சீசனில் பதிவு செய்யாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இவ்வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணி 70 ரன்களில் சென்னை அணியிடம் சுருண்டது. இந்த போட்டிக்குப் பிறகு நடந்த அனைத்து போட்டிகளிலும் மற்ற அணிகள் அதிக ரன்களையே குவித்து விளையாடி வருகிறது.
மிகவும் உற்சாகமான முறையில் ஆரமித்துள்ள 2019 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சிறந்த ஆடும் XI-ஐ பற்றி காண்போம்.
தொடக்க ஆட்டக்காரர்கள்: ஷிகார் தவான், டேவிட் வார்னர்
டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் 2018 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஆஸ்திரேலிய சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக தொடக்கத்தை அளித்துள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதங்களை விளாசியுள்ளார்.
ஷிகார் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் சிறந்து இளம் வீரர்கள் உள்ளனர். அந்த அணியில் சீனியராக பேட்டிங் லைன்-அப்பை வழிநடத்துகிறார் ஷிகார் தவான். டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங்கில் தூணாக திகழ்கிறார் ஷிகார் தவான்.
மிடில் ஆர்டர்: ராபி உத்தப்பா, சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா
ராபின் உத்தப்பா சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்சியாக அதிக ரன்களை குவித்து விளையாடி உள்ளார். இதேபோல் கடந்த சில ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காகவும் சிறந்த தொடர்சின ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளார்.உத்தப்பாவின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணியின் ரன்களை உயர்த்துகிறார்.
சிறந்த மிடில் ஆர்டர் பேட்டிங் ஸ்டார்கள் அனைவரும் கொல்கத்தா அணியிலே உள்ளனர் என்று கூற வேண்டும். அந்த அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் ராணா இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் விளையாடிய முதல் இரு போட்டிகளிலும் அரைசதம் விளாசி சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.
சஞ்சு சாம்சன் இவ்வருட ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளாசினார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் சிறப்பான ஷாட்களை மிடில் ஆர்டரில் வெளிபடுத்தியுள்ளார். 25 வயதிற்கு முன்னதாக இரு இரு ஐபிஎல் சதங்களை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 2017 ஐபிஎல் தொடரில் ஒரு சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் கீப்பர் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்: ரிஷப் பண்ட், ஆன்ரிவ் ரஸல் & ரஷீத் கான்
ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். குறிப்பாக மும்பை அணியின் நட்சத்திர பௌலரான பூம்ரா ஓவரிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர் விளையாடிய கடைசி 8 ஐபிஎல் போட்டிகளில் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 500 ரன்களை குவித்துள்ளார்.
இவ்வருட ஐபிஎல் தொடரின் சிறந்த வீரராக ஆன்ரிவ் ரஸல் திகழ்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரான இவர் கொல்கத்தா அணியின் முதல் இரு வெற்றிக்கு முழு காரணமாக இருந்துள்ளார். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி முதல் இரு போட்டியில் யார் மூலம் வெற்றி பெற்றது என கேட்டாள் அந்த அணியே இவரை கை நீட்டும். வலதுகை பேட்ஸ்மேனான இவர் முதல் இரு போட்டியிலே 10 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.
ரஷித் கான் கணிக்கமுடியாத ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர். ஆனால் இவரை பெரும்பாலும் பௌலராகவே ஹைதராபாத் அணி பயன்படுத்துகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பௌலிங்கில் 1 விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
பந்துவீச்சாளர்கள்: ஜாஸ்பிரிட் பூம்ரா, யுஜ்வேந்திர சகால், இம்ரான் தாஹீர்
பெங்களூரு அணி இந்த சீசனில் விளையாடிய முதல் இரு போட்டியிலும் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியில் உள்ள சில வீரர்கள் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளனர். விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியில் யுஜ்வேந்திர சகால் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னரான இவர் 2019 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனில் நீடிக்க இவரது ஆட்டத்திறன் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இம்ரான் தாஹீர் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். தென்னாப்பிரிக்க லெக் ஸ்பின்னரான இவர் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணியை 70 ரன்களுக்கும் மடக்கியது சென்னை அணி. தாஹீரின் இந்த ஆட்டம் தொடர்ந்தால் 2019 ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழும் என்பது சந்தேகமில்லை.
ஜாஸ்பிரிட் பூம்ரா இந்த தலைமுறையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முதல் போட்டியில் சொதப்பியிருந்தாலும் பெங்களூரு அணியுடனான இரண்டாவது போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். அந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பூம்ரா.