நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தடுமாறுவதற்கான மூன்று காரணங்கள்

kohli
kohli

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஒரு முறை கூட ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இருப்பினும், பலதரப்பட்ட ரசிகர்கள் நேசிக்கப்படும் அணியாக இது திகழ்ந்து வருகின்றது. கடந்த சீசன்களில் இந்த அணி தொடர் முழுவதுமே அசத்தி இருந்தாலும், ஐபிஎல் பட்டத்தை வெல்ல தவறி உள்ளது. 2019 ஐபிஎல் தொடரிலாவது இந்த அணி ஐபிஎல் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியுற்று ஏமாற்றத்தை அளித்தது.

இந்த தோல்விகளில் குறிப்பிடும் படியான போட்டி என்றால், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி பந்தில் மலிங்கா வீசிய நோ பாலை நடுவர்கள் கவனிக்க தவறியது தான். இதனால், துரதிஷ்டவசமாக இந்த அணி தோல்வியுற்றது. பின்னர் நடைபெற்ற ஐந்து போட்டிகளில் பெங்களூர் அணி நான்கில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது. இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்புக்குள் இந்த அணி தகுதி பெறும்.

இருப்பினும், தொடரின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், காயம் காரணமாக டேல் ஸ்டெயின் விலகியுள்ளதால் இனிவரும் போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறுமா என்பதில் சற்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் இந்த தொடரில் பெங்களூர் அணியின் இத்தகைய ஏமாற்றங்களுக்கு வித்திட்ட மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#1.விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் முழுவதுமாக நம்பி உள்ளது:

Virat Kohli and AB De Villiers
Virat Kohli and AB De Villiers

கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளதால் பேட்டிங்கில் பெரிதளவு இவர்களையே நம்பியுள்ளது. அவ்வப்போது பேட்டிங்கில், விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் கணிசமான ரன்களைக் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.அணியில் இடம்பெற்ற மற்றொரு ஆல்ரவுண்டரான மொயின் அலி இங்கிலாந்திற்கு திரும்பியுள்ளதால் அவரின் இடத்தை தற்போது நிரப்ப வேண்டியுள்ளது. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியை மட்டுமே நம்பாமல் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பெங்களூரு அணியின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

#2.வேகப்பந்து வீச்சில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம்:

Dale Steyn
Dale Steyn

டி20 போட்டிகளில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனை கூட தனது சிறப்பான பந்துவீச்சால் திணறடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள், பந்துவீச்சாளர்கள். ஒரு அணியில் சிறந்த பேட்டிங் கூட்டணி இருந்தாலும் வெற்றிகரமான பவுலின் கூட்டணி இல்லை என்றால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகும். இதே போல தான், பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல் போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றிருந்தாலும் சிறந்த பவுலர்கள் இல்லாமல் இந்த அணி திணறி வருகின்றது. சுழல் பந்துவீச்சாளரான சாஹலை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த தொடரில் 20 விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ், தற்போதைய தொடரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி திணறி வருகிறார். அணியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை போக்கும் நோக்கத்தில் மட்டுமல்லாமல் அணிக்கு வெற்றியை தேடி தரக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் உள்ளது, பெங்களூர் அணி.

#3.பின்வரிசை பேட்டிங்கில் சிறந்த ஒரு ஃபினிஷர் பற்றாக்குறை:

Marcus Stoinis
Marcus Stoinis

மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசல் போன்றதொரு சிறந்த ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வருகின்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. தற்போது அணியில் ஒரு சிறந்த ஆட்டத்தை முடிக்கும் வீரராக திகழும் ஸ்டோனிஸ் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளதால் இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் இன்னிங்ஸின் தொடக்கத்தில் சிறப்பாக ரன்களைக் குவித்திருந்தாலும் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் வீரர் இடம்பெற்றால் அணிக்கு கூடுதலாக 15 முதல் 20 ரன்களை சேர்க்கலாம்.

Quick Links

App download animated image Get the free App now