பொதுவாக டி20 என்பது பேட்ஸ்மேன்களுக்கு உரித்தான ஒன்றாகும். கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அணியின் நிர்வாகமும் பெரிய ஹிட்களை தான் பேட்ஸ்மேன்களிடமிருந்து டி20 யில் எதிர்பார்க்கின்றனர். பௌலர்களும் பேட்ஸ்மேன்களுக்கு சமமாக ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பௌலர்கள் அவ்வளவாக ஜொலிக்காமல் ரன்களை வாரி வழங்குவர். ஆனால் தற்போது பேட்ஸ்மேன்களின் நுணுக்கத்தை அறிந்து அதற்கேற்றவாறு பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.
கடைசி சில வருடங்களாக பந்துவீச்சில் வலிமையாக உள்ள அணிகளே கோப்பைகளை கைப்பற்றுகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பந்துவீச்சில் மிகவும் திறமை வாய்ந்த அணியாக திகழ்கிறது. அந்த அணி பௌலர்கள் எப்போழுதும் ஏமாற்றியதில்லை. புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷித் கான் போன்றோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு டி20யில் தங்களுக்கென ஒரு தனியிடத்தை வைத்துள்ளனர்.
இந்த வருட சீசனில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு திகழ்கிறது. உலகக் கோப்பை தொடர் மே மாத இறுதியில் தொடங்கவிருப்பதால் சர்வதேச அணியில் விளையாடும் சில வீரர்கள் பாதி ஐபிஎல் சீசனுடன் செல்ல வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் இதனை கருத்தில் கொண்டு மாற்று ஆட்டக்காரர்களையும் அணியில் தேர்வு செய்து வைத்துள்ளது.இதனை வைத்து ஐபிஎல் தொடரில் டாப்-3 பௌலிங் அணியை பற்றி காண்போம்.
#3 டெல்லி கேபிடல்ஸ்
கடந்த சீசனில் சோபிக்க தவறிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தற்போது டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில் அந்த அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் அந்த அணியின் மோசமான பௌலிங்கே காரணம். எனினும் 2019 ஐபிஎல் சீசனில் வலிமையான பந்துவீச்சு அணியாக டெல்லி கேபிடல்ஸ் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கடந்த சீசனில் டிரென்ட் போல்ட் சிறப்பாக விளையாடினார். 2018 ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் மிகப்பெரிய பந்துவீச்சாளர்களான ககிஸோ ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் தொடக்கத்திலேயே காயம் காரணமாக விலகினர். இதுவே அந்த அணி பந்துவீச்சில் சொதப்ப காரணமாக இருந்தது. 2019 ஐபிஎல் சீசனில் இந்த இரு அணி வீரர்களும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களாரான அக்ஸர் படேலை வாங்கியுள்ளது. இவரது சிறப்பான ஸ்விங் பந்துவீச்சு எதிரணியை திகைக்க வைக்கும். அத்துடன் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா டெல்லி அணியின் பக்கபலமாக உள்ளார். நேபாள் இளம் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சனே மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக இந்த அணியில் உள்ளார்.
ஹர்சல் படேல் மற்றும் ஏவிஸ் கான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். டெல்லி அணியை மேலும் வலிமையாக்க மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நாத்து சிங் மற்றும் உள்ளுர் வீரர் இஷாந்த் சர்மா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.
#2 கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்
கொல்கத்தா அணியின் வலிமையான பந்துவீச்சு லைன்-அப் எப்போழுதும் ஒரே சீராக இருக்கும். கடந்த சீசனில் இந்த அணிக்கு எமனாக அமைந்த நிகழ்வு என்றால் அது மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக 2018 ஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு முன்னதாகவே விலகியதுதான். தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா மற்றும் சிவம் மாவி சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தினர்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் லாக்கி பெர்குசன் மற்றும் அன்ரீஜ் நோர்டிச் ஆகிய இரு பந்துவீச்சாளர்களை வாங்கியுள்ளது. லாக்கி பெர்குசன் நியூசிலாந்து அணியில் சிறந்த பந்துவீச்சாளராக தற்போது திகழ்கிறார். அன்ரீஜ் நோர்டிச் தென்னாப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட்டின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
உலகின் பல டி20 லீக்குகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி குர்னே கொல்கத்தா அணியில் விளையாட உள்ளார். காயம் காரணமாக விலகியுள்ள கமலேஷ் நாகர் கோட்டிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள கேரள வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் உள்ளுர் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் சிவம் மாவிக்கு பதிலாக கர்நாடக சுழற்பந்து வீச்சாளர் கே.சி. கரியப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 20.60 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் தூணாக சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர் திகழ்கின்றனர்.
குல்தீப் யாதவ் தற்போது உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இவரது வெவ்வேறு கோணத்தில் வீசும் பந்துவீச்சு திறன் குல்தீப் யாதவின் தனித் திறமையாக திகழ்கிறது.
#1 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் ரஷித் கான் போன்ற சிறந்த டி20 பௌலர்கள் உள்ளனர். அத்துடன் வேகப்பந்து வீச்சில் சிறந்த அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது.
சித்தார்த் கவுல் கடந்த இரு வருடங்களாக வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்திறனால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த சீசனில் குறைவான பங்களிப்பை அளித்த கலீல் அகமது இந்த சீசனில் அதிக பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசில் தம்பி மற்றும் சந்தீப் சர்மா போன்ற உள்ளுர் பந்துவீச்சாளர் அணியின் பக்கபலமாக திகழ்கின்றனர். பில்லி ஸ்டேன்லெக் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சுழற்பந்து வீச்சில் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முகமது நபி அந்த அணிக்கு வலிமை சேர்க்கின்றனர். அத்துடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஷபாஜ் நதீமை டெல்லி கேபிடல்ஸ் அணியிடமிருந்து பரிமாற்றம் செய்து கொண்டது. நதீம் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே இந்த சீசனில் ரஷித் கான்-வுடன் சேர்ந்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்வார் என தெரிகிறது.