#2 கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்

கொல்கத்தா அணியின் வலிமையான பந்துவீச்சு லைன்-அப் எப்போழுதும் ஒரே சீராக இருக்கும். கடந்த சீசனில் இந்த அணிக்கு எமனாக அமைந்த நிகழ்வு என்றால் அது மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக 2018 ஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு முன்னதாகவே விலகியதுதான். தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா மற்றும் சிவம் மாவி சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தினர்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் லாக்கி பெர்குசன் மற்றும் அன்ரீஜ் நோர்டிச் ஆகிய இரு பந்துவீச்சாளர்களை வாங்கியுள்ளது. லாக்கி பெர்குசன் நியூசிலாந்து அணியில் சிறந்த பந்துவீச்சாளராக தற்போது திகழ்கிறார். அன்ரீஜ் நோர்டிச் தென்னாப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட்டின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
உலகின் பல டி20 லீக்குகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி குர்னே கொல்கத்தா அணியில் விளையாட உள்ளார். காயம் காரணமாக விலகியுள்ள கமலேஷ் நாகர் கோட்டிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள கேரள வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் உள்ளுர் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் சிவம் மாவிக்கு பதிலாக கர்நாடக சுழற்பந்து வீச்சாளர் கே.சி. கரியப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 20.60 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் தூணாக சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகியோர் திகழ்கின்றனர்.
குல்தீப் யாதவ் தற்போது உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இவரது வெவ்வேறு கோணத்தில் வீசும் பந்துவீச்சு திறன் குல்தீப் யாதவின் தனித் திறமையாக திகழ்கிறது.