ஒவ்வொரு ஐ.பி.எல் அணிகளுக்கும் மிக முக்கிய வீரர்கள் இந்த தொடக்க ஆட்டக்காரர்கள் தான். கடந்த ஐ.பி.எல் சீசனில் ஒரு சில தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே ஏலத்தில் தங்களை நல்ல விலைக்கு எடுத்தது சிறந்து என நிருபித்தனர். ஆனால் இன்னும் சில தொடக்க ஆட்டக்காரர்கள் அதிகவிலைக்கு ஏலம் போயிருந்தாலும் நன்றாக சோபிக்கவில்லை என்பதே உண்மையாகும். பெரும்பாலும் சில அணிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாலும் , மூன்றாவதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்களாலும் ரன்களை சேர்ப்பர். ஆனால் கடந்த சீசனில் பஞ்சாப் அணி மட்டும் ஓபனிங் பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பியிருந்தது.
ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்கனவே 2019 சீசனில் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் விவரத்தை சமர்பிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019 ஐ.பி.எல் சீசனில் தங்களது ஓபனிங் பேட்ஸ்மேன்களை மாற்ற வாய்ப்புள்ள அணிகளை பற்றி நாம் இங்கு காண்போம்.
#1.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஆர்.சி.பி அணி கடந்த சீசனில் அதிக தொகையை செலவழித்து சிறந்த வீரர்களை தேர்வு செய்தது. ஆனால் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்சும், பௌலிங்கில் உமேஷ் யாதவை தவிர வேறு யாரும் அந்த அணியில் சோபிக்கவில்லை.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மெக்கல்லம் , டிகாக் அவ்வளவாக தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்தவில்லை. கடந்த சீசனில் மொத்தமாக மெக்கல்லம் 127 மற்றும் டிகாக் 201 ரன்களை மட்டுமே குவித்தனர்.
கடந்த ஐ.பி.எல் சீசனில் டிகாக் சரியாக விளையாடத காரணத்தால் பெங்களூரு அணி அவரை ரிலீஸ் செய்தது. மும்பை அணி அவரை தம் அணியில் இணைத்துக் கொண்டது. கடந்த சீசனில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்த சீசனில் பெங்களுரு அணியின் நிர்வாகம் ஓபனிங் பேட்ஸ்மேன்களை சிறிது கணித்து தேர்வு செய்ய வேண்டும். கடந்த சீசன் முழுவதும் பென்ஜில் இருந்த மனன் வோக்ரா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணியிடம் மிகக் குறைந்த தொகையே செலவழிக்க முடியும் என்பதால் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும்போது சற்று நிதானமாக யோசித்து தேர்வு செய்ய வேண்டும்.
#2.மும்பை இந்தியன்ஸ்
கடந்த சீசனில் மும்பை அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருசிலர் மட்டுமே நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிவிஸ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிக ரன்களை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இருவருமே ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்திலிருந்தே சொதப்பிக்கொண்டுதான் இருந்தனர். கடந்த சீசனில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் 11 ரன்களிலும், லிவிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
இதனால் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் ரோஹித் சர்மா 4 வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஓபனிங்கில் ரோஹித்திற்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் களமிறக்கப்பட்டார். மூன்றாவதாக இசான் கிஷான் களமிறங்கினார்.
லிவிங்ஸ்டன் மற்றும் ரோஹித் சர்மா ஓபனிங்கில் சொதப்பியதால் மாற்று வீரராக வந்த சூர்யகுமார் யாதவ் ஓபனிங்கில் அற்புதமாக பேட்டிங் செய்தார். பின்னர் ரோஹித் சர்வதேச போட்டிகளில் தனது தவற்றை சரி செய்துகொண்டார். மும்பை அணி பெங்களூரு அணியால் ரிலிஸ் செய்யப்பட்ட டிகாக்கை தமது அணியில் இணைத்துக் கொண்டது. 2019 ஐ.பி.எல் சீசனில் மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் யார் களமிறங்கப் போகிறார் என ரசிகர்கள் அணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
#3.டெல்லி டேர்டெவில்ஸ்
டெல்லி அணியில் எவ்வளவு மாற்றங்கள் செய்தாலும் அந்த அணியின் சொதப்பல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சீசனின் முதல் பாதிவரை காம்பீர் தலைமையில் களமிறங்கி அதிகப்படியான தோல்விகளை சந்தித்தது, அதனால் காம்பீர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார் . பின்னர் ஸ்ரேயஸ் ஐய்யர் டெல்லி அணியை வழிநடத்தினார் . பின்னர் சில இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியும் அந்த அணியை அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை. டெல்லி அணியில் சில சிறந்த சர்வதேச வீரர்களனா காலீன் முன்ரோ, ஜெசன் ராய் இருந்தும் அவர்களால் சிறந்த ஆட்டதிறனை வெளிபடுத்த இயலவில்லை.
பிரித்வி ஷா சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளதால் 2019 ஐ.பி.எல் சீசன் அவருக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி ஏற்கனவே அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், நதிம் ஆகியோரை ஹைதராபாத் அணிக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து தவானை டெல்லி அணி வாங்கியுள்ளது. தவானுடன் ,ரிஷப் ஃபண்ட் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#4.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத் அணி கடந்த சீசனில் கானே வில்லியம்சன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த சீசனில் கேன் வில்லியம்சன் மொத்தம் 735 ரன்களை குவித்து 2018 ஐ.பி.எல் சீசனில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச போட்டிகளில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஒருவருடம் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டு ஆட்டத்திறனை தற்சமயம் இழந்துள்ள கேன் வில்லியம்சன் கடந்த சீசனில் அற்புதமான கேப்டனாக செயல்பட்டார். ஷிகர் தவான் ஓபனிங்கில் அசத்தினார். அவருடன் கைகோர்க்க இரித்திமான் சாகா, கொசாமி, அலெக்ஸ் ஹேல்ஸ் போன்றோரை முயற்சி செய்து பார்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் மட்டுமே சோபித்தார்.
தவான் மட்டுமே அற்புதமாக விளையாடி மொத்தமாக 497 ரன்களை சேர்த்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் தானே வில்லியம்சனின் எதிர்பார்ப்பின்படி விளையாடவில்லை. கடந்த சீசனில் ஹைதராபாத் அணியின் நல்ல ஆட்டத்திறனிற்கு பேட்டிங்கை விட பௌலிங்கே முழு காரணமாகும்.
ஹைதராபாத் அணியின் நிர்வாகம் தவானை டெல்லி அணிக்கு ரிலீஸ் செய்து அவர்களிடமிருந்து அபிஷேக் சர்மா, நதிம்,விஜய் சங்கர் ஆகியோரை வாங்கியுள்ளது. 2019 ஐ.பி.எல் சீசனில் டேவிட் வார்னர் அணிக்கு திரும்புவார். டேவிட் வார்னருடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார், ஐ.பி.எல் ஏலத்தில் யாரேனும் புதிதாக வாங்குவார்களா என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
எழுத்து: ஸ்ரேயஸ்
மொழியாக்கம்: சதீஸ்குமார்