2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான ஏலம் கடந்த செவ்வாய்கிழமை ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் வாங்கப்பட்டனர்.
ஆச்சர்யமூட்டும் வகையில் நட்சத்திர வீரர்கள் மெக்கல்லம், ஸ்டெய்ன், மோர்னே மோர்கெல் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை
2019ஆம் ஆண்டு உலக கோப்பை நடைபெறுவதால் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த தொகுப்பில் ஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறை பற்றி பார்ப்போம்
(குறிப்பு:- 5 அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களை வாங்கிய அணிகளை பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சில வீரர்களை அதிக விலைக்கு வாங்கியது
ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் போன்ற சூழல் பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில் பஞ்சாப் அணி ஏலத்தில் 8.4 கோடிக்கு வருண் சக்ரவர்திதியை வாங்கியது. 2019 உலக கோப்பை இந்திய அணிக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை. எனவே வருண் சக்ரவர்திதியை அதிக விலைக்கு வாங்கியது தவறான முடிவாக கருதப்படுகிறது.மேலும், மூன்றாவதாக ஒரு ஸ்பின்னரை பஞ்சாப் அணி ஆடும் 11-இல் சேர்க்க வாய்ப்பில்லை.
இங்கிலாந்து வீரர் சாம் கரனை 7.2 கோடி கொடுத்து வாங்கியது பஞ்சாப் அணி. அவர் இங்கிலாந்து நாட்டின் உலக கோப்பை போட்டி அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது .அவ்வாறு அவர் தேர்வு செய்யப்பட்டால், அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியில் விலக நேரிடும் .
ராஜஸ்தான் ராயல்ஸ் - சொதப்ப கூடிய வீர்ர்களை வாங்கியது
ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான தருணத்தில் அதிகம் சொதப்ப கூடிய வீரர்களை வாங்கியுள்ளது. சென்ற வருடம் அந்த அணியில் விளையாடி சிறப்பாக செயல்படாத உனட்கட்டை ராஜஸ்தான் அணி 8.4 கோடிகள் கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளது.
மேலும் அந்த அணி ஐபிஎல் ஏலத்தில் வருண் ஆரோனை 2.2 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் டி20 போட்டிகளில் அதிகம் அனுபவமில்லாதவர். மேலும் அவர் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் வீரர்களில் ஒருவர்.
ஆட்டத்தின் சிக்கலான தருணத்தில் சொதப்பக்கூடிய ஸ்டூவர்ட் பின்னி, தவல் குல்கர்னி,ஜெய்தேவ் உனத்கட், வருண் ஆரோன் போன்ற வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு தலைவலியை உண்டாக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அனுபவமில்லாத வெளிநாட்டு வீரர்களை வாங்கியது
கொல்கத்தா அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன் அனுபவம் மிக்க வீரர்கள் ஸ்டார்க் மற்றும் ஜான்சானை விடுவித்தது. அந்த அணி ஐபிஎல் ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வீரரகளை வாங்க திட்டமிட்டது.
இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி லொக்கி பெர்குசன், அன்ரிச் நோர்ட்ஜெ , ஹாரி குர்னே போன்ற இந்திய ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத வீரர்களை வாங்கியது. அவர்களுக்கு பதில் கொல்கத்தா அணி மோர்னே மோர்கெல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை வாங்கி இருக்கலாம்.
மோர்கெல் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக விளையாடி அந்த அணி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கொல்கத்தா அணி அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பந்துவீச்சாளரை வாங்காமல் தவறு செய்துவிட்டது போல தெரிகிறது.