ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சரியான வேகப்பந்துவீச்சாளரை வாங்கவில்லை
விராட் கோலி,டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் உள்ளடக்கிய பெங்களூரு அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. ஆனால் சென்ற வருடம் பந்துவீச்சில் சொதப்பியதால் அந்த அணி ஐபிஎல் தொடரை வெல்ல முடியாமல் போனது.
அந்த அணியின் வேக பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் துல்லியமாக பந்துவீசாத காரணத்திலால் அந்த அணி பல போட்டிகளில் தோல்வி அடைந்தது.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹெட்மேயர், சிவம் துபே போன்ற வீரர்களை வாங்கிய பெங்களூரு அணி தனது பலவீனமான வேகப்பந்து வீச்சை சரிசெய்ய தவறியது . இந்தக் குறையை அந்த அணி எவ்வாறு சரி செய்யும் என்பதை போட்டியில் காண்போம்
டெல்லி கேப்பிடல்ஸ் - அனுபவமில்லாத பௌலர்களை வாங்கியது
ஐபிஎல் ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கிய அணி டெல்லி ஆகும். இருப்பினும் அந்த அணி ஏலத்தில் சரியான பந்துவீச்சாளர்களை வாங்கவில்லை.
அக்சார் படேல் நீங்கலாக டெல்லி அணி வாங்கிய பந்துவீச்சாளர்கள் அதிகம் அனுபவமில்லாதவர்கள். முகமது ஷமியை விடுவித்த டெல்லி அணி அவருக்கு பதில் கீமோ பால் மற்றும் நாத்து சிங்கை வாங்கியது. கீமோ பால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. நாத்து சிங் பெரிய தொடரில் விளையாடிய அனுபவமில்லாதவர்.
மேலும் டெல்லி அணி சமீப காலமாக டி20 போட்டிகள் அதிகம் விளையாடாத இஷாந்த் ஷர்மாவை வாங்கியுள்ளது. எனவே டெல்லி அணியின் பந்துவீச்சு கிறிஸ் மோரிஸ், கங்கிசொ ரபாடா, ட்ரெண்ட் போல்ட் போன்ற வீரர்களை பெரிதும் நம்பி உள்ளது
மும்பை இண்டியன்ஸ் - அக்சார் படேலை வாங்காதது
மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் அக்சார் படேலை வாங்க தவறிவிட்டது. சென்ற வருடம் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தனது முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக க்ருனால் பாண்டியா மற்றும் மாயன்க் மார்க்கண்டேவை களமிறங்கியது.
சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் க்ருனால் பாண்டியா நிறைய ஓவர்கள் வீசவில்லை. மாயன்க் மார்க்கண்டே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய போதிலும் பிற்பாதியில் சரியாக விளையாடவில்லை .
அக்சார் படேல் மிடில் ஓவர்களில் துல்லியமாக பந்துவீசும் திறன் பெற்றவர். மேலும் அவர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதிலும் வல்லவர்.அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கி இருந்தால், அவர் க்ருனால் பாண்டியா மற்றும் மார்கண்டேவுக்கு போட்டியாக இருந்திருப்பார் ,மேலும் அவர் மும்பை அணியின் சுழற்பந்துவீச்சை வலுபடுத்தியிருப்பார்.
எழுத்து- அமேய வைத்யா
மொழியாக்கம்- தினேஷ் சத்யா