ஐபிஎல் தொடர் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு மிகுந்த உறுதுணையாக இருந்துள்ளது - ஆரோன் ஃபின்ச்

Aaron finch
Aaron finch

2019 உலகக் கோப்பை தொடரின் மே 1 அன்று நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானித்தான் மற்றும் முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியாவும் பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் மோத உள்ளன. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் வருகையினால் ஆஸ்திரேலிய அணி அதிக வலிமை வாய்ந்ததாக திகழ்கிறது. இருவரும் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையே உலகக் கோப்பை தொடரில் அவர்கள் உலகக் கோப்பை தொடரில் சிறந்து விளங்க காரணமாக இருக்கும் என ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஒரு வருடம் தடை செய்யப்பட்டடனர். தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள இவர்கள், தற்போது நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை தொடரை சரியாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் தங்களது பெயரை சரிவிலிருந்து மீட்பர். இதற்கிடையில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர். டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் என்ற பெருமையை பெற்றார். ஸ்டிவன் ஸ்மித் ஒருசில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், பின்னர் ஆஸ்திரேலிய வண்ணத்தில் களமிறங்கிய உடன் தனது பழைய ஆட்டத்திறனை வெளிகொணர்ந்து விட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் இவ்வருட முதல் உலகக்கோப்பை போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றதன் மூலம் அதிவேகமாக சர்வதேச போட்டிகளுக்கு தயாராக முடிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஃபின்ச் கூறுகையில் இரு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சிறப்பான வீரர்களாக திகழ்வார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளதாவது,

"இருவருமே உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள், எனவே கிரிக்கெட்டில் உடனே தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள், மீண்டும் கடந்த காலங்களில் இருந்ததை விட சிறந்த வீரர்களாக திகழ்வார்கள். இவர்கள் தங்களை மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அர்ப்பணிக்க ஒரு பயிற்சி தொடராக ஐபிஎல் டி20யை தேர்வு செய்ததது மிகவும் சரியானது ஆகும். கிரிக்கெட்டில் ஒரு பெரிய இடத்திற்கு செல்ல ஐபிஎல் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இருவரும் பங்கேற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தான் விட்ட இடத்திலிருந்தே தங்களது இயல்பான ஆட்டத்தை தொடங்குவார்கள்.

2019 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முதல் போட்டிக்கு முன்பாகவே டேவிட் வார்னரின் உடல் தகுதி ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அணித்தேர்வில் இடம்பெற்றுள்ளார். ஆரோன் ஃபின்ச் இந்த செய்தியை பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார் ஆனால் அவர் ஆடும் XI-ல் இடம்பெறுவாரா என்பதை பற்றி எதும் தெரிவிக்கவில்லை.

டேவிட் வார்னர் தற்போது நலமுடன் உள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் போட்டியில் அவர் பங்கேற்பார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாங்கள் ஆடும் XI-ஐ தேர்வு செய்யும் போது அதிக கவணத்துடன் தேர்வு செய்ய உள்ளோம். ஆனால் யாருடைய பெயரையும் தற்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. அனைத்து வீரர்களுமே ஆடும் XI-ற்கான போட்டி வீரர்களே.

எனக் கூறி ஆரோன் ஃபின்ச் தன் நேர்காணலை முடித்தார்

Quick Links

Edited by Fambeat Tamil