இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) இந்த தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் மிகவும் பிரமாண்டமாக 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை கொண்டே சில வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் ஆண்டுக்கு ஆண்டு போட்டிகளில் சதம் வீளாசும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக முறை அரைசதங்களை வீளாசி வீரர்களை பார்ப்போம்.
#5 ரோகித் சர்மா
ஐபிஎல் போட்டிகளில் முதல் தொடரில் இருந்து விளையாடி வரும் ரோகித் சார்மா தற்போது மும்பை அணியின் கேப்டனாக உள்ளார். இவர் இதுவரை இரண்டு அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2008-2010 டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும், 2011ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காகவும் விளையாடி உள்ளார். இவர் இதுவரை 173 போட்டிகள் விளையாடி 4493 ரன்களை அடித்துள்ளார் ரோகித் சர்மா. இவரது சாராசரி 31.86 ஆக உள்ளது. இவர் ஐபிஎல் போட்டியில் இதுவரை 34 அரைசதங்களை அடித்துள்ளார்.
#4 விராட் கோலி
ஐபிஎல் போட்டிகளில் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் விராட் கோலி தற்போழுது பெங்களுரு அணிக்கு கேப்டனாக உள்ளார். இவர் இதுவரை பெங்களுரு அணிக்கு மட்டுமே 2008 ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 163 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 4948 ரன்களை அடித்துள்ளார். இவரது சாராசரி 38.35 ஆக உள்ளது. இவர் இதுவரை 34 அரைசதங்களை வீளாசி உள்ளார்.
#3 சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வீரராக உள்ளவர் சுரேஷ் ரெய்னா இவர் மிஸ்டர் ஐபிஎல் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர். இவர் தற்போழுது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இதுவரை இரண்டு அணிக்காக விளையாடி உள்ளார். 2016-17 ஆண்டுகள் குஜாராத் அணிக்கு கேப்டனாக விளையாடினார். இவர் இதுவரை 173 போட்டிகள் விளையாடி 4985 ரன்களை அடித்துள்ளார். இவரது சாராசரி 34.37 ஆக உள்ளது. இவர் இதுவரை 35 அரைசதங்களை வீளாசி உள்ளார்.
#2 டேவிட் வார்னர்
ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது சீசனில் இருந்து விளையாடி வரும் வார்னர். சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக 2015-16 ஆண்டு இருந்துள்ளார். இவர் இதுவரை இரண்டு அணிகளுக்காக விளையாடி உள்ளார். 2009-13 டெல்லி அணிக்காகவும், 2014ம் ஆண்டு முதல் ஐதராபாத் அணிக்காகவும் விளையாடி உள்ளார். இவர் இதுவரை 114 போட்டிகள் விளையாடி 4014 ரன்களை அடித்துள்ளார். இவரது சாராசரி 40.54 வைத்துள்ளார். இவர் 36 அரைசதங்கள் அடித்துள்ளார்.
#1 கவுதம் கம்பீர்
ஐபிஎல் போட்டிகளில் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் கவுதம் கம்பீர். கொல்கத்தா அணிக்காக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். இவர் இதுவரை டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார். இவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். இவர் 154 போட்டிகள் விளையாடி 4217 ரன்களை அடித்துள்ளார். இவர் 36 அரைசதங்களை அடித்துள்ளார்.