Create
Notifications
Favorites Edit
Advertisement

ஐபிஎல் வரலாறு: 5 சிறப்பான எகானமி ரேட் வைத்துள்ள பந்துவீச்சாளர்கள் 

ANALYST
சிறப்பு
Published 14 Mar 2019, 15:01 IST
14 Mar 2019, 15:01 IST

சுனில் நரேன்
சுனில் நரேன்

உலகின் முன்னணி டி20 தொடர்களில் ஒன்றான ஐபிஎல் திருவிழா வருகிற மார்ச் 23ம் தேதி அன்று சென்னையில் தொடங்கவுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை அணி பலமிக்க பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் பல சுவாரசியமான ஞாபகங்களை நமக்கு தந்துள்ளது. இந்த சீசன் பொறுத்த வரையில் பல வீரர்களுக்கு இது முக்கியமானவை ஆகும். ஏனென்றால் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க மற்றும் மெருகேத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசன் தான் உலகக்கோப்பைக்கு முன்பாக நடக்க இருக்கும் முதல் தொடர். ஆகவே இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களே அதிகளவு ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் சமாளிக்கும் திறமை சில ஜாம்பவான் பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. முக்கியமான கட்டத்தில் எதிரணியின் விக்கெட்டை எடுத்து தன் அணிக்கு வலுசேர்ப்பார்கள். இது மட்டும் இல்லாமல் எதிரணியை ரன்கள் எடுக்க விடாமல் தடுப்பதும் ஒரு பந்துவீச்சாளரின் திறமை. அப்படி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான விதமாக பந்துவீசி நல்ல எகானமி ரேட் வைத்திருக்கும் 5 பந்துவீச்சாளர்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

குறிப்பு: குறைந்தபட்சம் 30 இன்னிங்சில் பந்து வீசிருக்க வேண்டும்.

சிறப்பு குறிப்பு: மெக்ராத்(6.61 - 14 இன்னிங்ஸ்), லசித் மலிங்கா(6.86 - 110 இன்னிங்ஸ்), டேனியல் வெட்டோரி(6.78 - 34 இன்னிங்ஸ்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்( 6.73 - 122 இன்னிங்ஸ்)


#5 டேல் ஸ்டெயின்: 6.72 - 90 இன்னிங்ஸ்

டேல் ஸ்டெயின்
டேல் ஸ்டெயின்

இந்த நூற்றண்டின் மிக சிறந்த பந்துவீச்சாளர்களுள் ஒருவர் டேல் ஸ்டெயின். இவர் கேரியரில் பல புகழ் பெற்று இருந்தாலும், காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இவரது துல்லியமான வேகம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சு பல சர்வதேச ஜாம்பவான்களையும் திணறடிக்க வைத்தது. டெஸ்ட் போட்டி, ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் கொடிகட்டி பறந்தார். தனது ஐபிஎல் கேரியரில் 4 அணிக்காக விளையாடியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2008-10 ஆண்டும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2010-12 ஆண்டும், சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக 2013-15 ஆண்டும் மற்றும் குஜராத் அணிக்காக 2016 ஆம் ஆண்டு விளையாடினார். பவர்பிலேவில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் ஸ்டெயின் பொறுத்தவரையில் ஐபிஎல் மட்டும் இல்லாமல் தென்னாபிரிக்கா அணிக்காகவும் பவர்பிலேவில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். இதுவரை 90 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 92 விக்கெட்கள் எடுத்துள்ளார் மற்றும் எகானமி ரேட்டாக 6.72 வைத்துள்ளார்.


#4 ரஷீத் கான்: 6.68 - 31 இன்னிங்ஸ்

ரஷீத் கான்
ரஷீத் கான்

ரஷீத் கான், இந்த பெயர் தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே உலகில் இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் பிரபலமாகியுள்ள இவர், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். வலது கை லெக் பிரேக் பந்துவீச்சாளரான ரஷீத் கான், தற்போது உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற இடத்தில உள்ளார். கிரிக்கெட் பற்றி பெரிதும் அறிந்திடாத ஆப்கான் மக்கள் மட்டும் இல்லாமல் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்துள்ளார்.

Advertisement

லெக் பிரேக் சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும், சட்டென்று பந்தை வேகமாக டெலிவரி செய்வதால் எதிரணி வீரர்களுக்கு கடினமான கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அணிக்கு தேவையான சமயத்தில் விக்கெட் எடுத்து கொடுப்பதில் வல்லவர். 20 வயதே ஆன ரஷீத் கான், 31 ஐபிஎல் போட்டிகளில் 38 விக்கெட்களை செய்துள்ளார் மற்றும் எகானமி ரேட்டாக 6.68 வைத்துள்ளார்.

1 / 2 NEXT
Modified 20 Dec 2019, 22:04 IST
Advertisement
Advertisement
Fetching more content...