ஐபிஎல் வரலாறு: 5 சிறப்பான எகானமி ரேட் வைத்துள்ள பந்துவீச்சாளர்கள் 

சுனில் நரேன்
சுனில் நரேன்

#3 முத்தையா முரளிதரன்: 6.67 - 66 இன்னிங்ஸ்

முத்தையா முரளிதரன்
முத்தையா முரளிதரன்

முரளிதரன், அதிக டெஸ்ட் விக்கெட்(800) எடுத்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இலங்கை வீரரான முரளிதரன் எப்போதுமே எதிரணி வீரர்களுக்கு எமனாய் இருந்துள்ளார். இவரது பந்து வீச்சை பெரும்பாலான வீரர்கள் தடுத்து(Defence) ஆடவே விரும்புவர். தனது ஆப் ஸ்பின் மூலம் பல ஜாம்பவான்களின் விக்கெட்டை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் இவரது பங்கு சிறப்பாகவே இருந்துள்ளது. இதுவரை 3 அணிகளுக்காக விளையாடியுள்ளார் முரளிதரன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-10 ஆண்டும், கொச்சி தஸ்கர்ஸ் அணிக்காக 2011 ஆம் ஆண்டும் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 2012-14 ஆண்டுகளில் விளையாடியுள்ளார். 66 ஐபிஎல் இன்னங்சில் 63 விக்கெட் எடுத்துள்ள முரளிதரன், எகானமி ரேட்டாக 6.67 வைத்துள்ளார்.

#2 அணில் கும்ப்ளே: 6.57 - 42 இன்னிங்ஸ்

அணில் கும்ப்ளே
அணில் கும்ப்ளே

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த இரண்டாவது வருடமே தான் சொந்த ஊரான பெங்களூரு அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். அதற்கு அடுத்த ஆண்டு(2010) ஐபிஎல் போட்டிகளில் இருந்தே ஓய்வு பெற்றார். செல்லமாக "ஜம்போ" என அழைக்கப்படும் கும்ப்ளே, சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் தனது உயரத்தை நன்றாக பயன்படுத்தி பந்தை பௌன்ஸ் செய்வதில் வல்லவர். இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான கும்ப்ளே, ஐபிஎல் போட்டிகளில் பவர் பிலேவில் பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவர். நேர்த்தியாக பந்து வீச கூடிய கும்ப்ளே, எதிரணியின் ரன் வேட்டையை தடுப்பது மட்டும் இல்லாமல் விக்கெட்டையும் எடுக்க கூடியவர். 42 போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே 45 விக்கெட்களை எடுத்துள்ளார், எகானமி ரேட்டாக 6.57 வைத்துள்ளார்.

#1 சுனில் நரேன்: 6.53 - 97 இன்னிங்ஸ்

சுனில் நரேன்
சுனில் நரேன்

நரேன், மிகவும் திறமையான வலதுகை சுழற்பந்து வீச்சாளர். தனி ஆளாய் இவர் விளையாடும் அணிக்கு வெற்றி தேடி தர கூடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி வருகிறார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பவர் பிலேவில் முடிந்தவரை அணிக்கு ரன் சேர்த்து கொடுப்பதில் வல்லவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2012 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் நரேன், 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.

30 வயதான நரேன் சென்ற ஆண்டு நடைபெற்ற தொடரில் மிகவும் மதிப்பு மிக்க வீரர் (Most Valuable Player) என்ற விருதை பெற்றார். இதுவரை 97 ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்றுள்ள நரேன், 112 விக்கெட்டும், எகானமி ரேட்டாக 6.53 வைத்துள்ளார்.