ஐபிஎல் வரலாறு: இந்திய உள்ளூர் பேட்ஸ்மேன்களால் நொறுக்கி தள்ளப்பட்ட சர்வதேச பந்துவீச்சாளர்களின் பௌலிங்

Rashid Khan
Rashid Khan

ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சர்வதேச அணிகளில் இடம்பிடிக்க ஒரு தடமாக அமைந்து வருகிறது. சில இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் தங்களின் முழு ஆட்டத்திறனையும் தங்களது அணிக்காக வெளிபடுத்தி விளையாடுவர். சிறந்த அனுபவ வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பதால், அந்த அனுபவத்தை ஐபிஎல் தொடர் மூலம் இளம் வீரர்கள் வாங்கி கொள்ள முடிகிறது. இதன்மூலம் இந்திய வீரர்கள் மட்டுமன்றி சில வெளிநாட்டு வீரர்களும் தங்களது தேசிய அணிக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் தங்களது இயல்பான ஆட்டத்திறனை வெளிபடுத்த முடியாமல் தடுமாறும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் மூலம் தங்களது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வரவும் மிகவும் உதவியாக உள்ளது.

பெரும்பாலன இளம் வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு வெளிபடுத்தும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்கும் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகின்றனர். இதன்மூலமாகவும் சில பேட்ஸ்மேன்கள் சர்வதேச அணிகளில் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் நிறைய முறை சர்வதேச பௌலர்களின் பௌலிங்கை இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் சிதைத்துள்ளனர்.

அவ்வாறு நடந்த முக்கிய 4 நிகழ்வுகளை பற்றி காண்போம்.

#1 மனன் வோஹ்ரா vs ரஷித் கான்

Vohra vs Rashid- 0, 4, 6, 4, 1, 1, 1, 0, 0, 4, 0, 6, 6, 4
Vohra vs Rashid- 0, 4, 6, 4, 1, 1, 1, 0, 0, 4, 0, 6, 6, 4

இந்த நிகழ்வு 2017 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மண்ணில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொண்ட போது நடந்தது. முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணி இந்த இலக்கை சேஸ் செய்யும் போது மனன் வோஹ்ரா-வை தவிர யாரும் நிலைத்து விளையாடவில்லை. அந்தப்ப போட்டியில் மனன் வோஹ்ரா 50 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்தார். இந்த அணியில் இவருக்கு அடுத்தபடியாக இயான் மோர்கன் 13 ரன்கள் அடித்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்தில் மனன் வோஹ்ரா, உலகின் டாப் பௌலரில் ஒருவரான ரஷித் கான்-ன் பந்துவீச்சை பதம் பார்த்தார். இவர் பஞ்சாப் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் குறைவாகவே பந்துவீசினார். மனன் வோஹ்ரா ரஷித் கான்-னிடமிருந்து 14 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களை எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு 10 பந்துகள் வீசி 5 ரன்களை மட்டுமே அளித்தார்.

ஆனால் அந்தப் போட்டியில் மனன் வோஹ்ரா-வின் அதிரடி எடுபடவில்லை. புவனேஸ்வர் குமாரின் வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்றது.

#2 ராகுல் த்ரிப்பாதி vs குல்தீப் யாதவ்

Tripathi vs Kuldeep- 2, 1, 6, 6, 6, 0, 1, 1, 0, 6
Tripathi vs Kuldeep- 2, 1, 6, 6, 6, 0, 1, 1, 0, 6

2017 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி அதன் சொந்த மண்ணில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்தனர். டாஸ் தோற்ற கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் கூட்டு முயற்சியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ராகுல் த்ரிப்பாதி-யை தவீர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

ராகுல் த்ரிப்பாதி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சரியாக கணித்து ஆடுகளத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டார். இந்த அதிரடி ஆட்டத்தில் சிறந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 10 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் த்ரிப்பாதி 29 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். மற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு 14 பந்துகளை வீசி 6 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார் குல்தீப் யாதவ்.

ராகுல் த்ரிப்பாதி அதிரடியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

#3 யோகேஷ் தக்வாலே vs மோர்னே மோர்கல்

Takawale vs Morkel- 0, 1, 4, 0, 4, 4, 0, 2, 4, 4, 0, 4
Takawale vs Morkel- 0, 1, 4, 0, 4, 4, 0, 2, 4, 4, 0, 4

இந்தியாவில் தேர்தல் காரணமாக 7வது ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதன் 11வது போட்டியில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஷார்ஜாவில் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 31 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்.

சேஸிங்கில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் மற்றும் யோகேஷ் தக்வாலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 8 ஓவர்களில் 67 ரன்களை எடுத்தனர். இந்த போட்டியில் 29 வயதான திரிபுராவை சேர்ந்த யோகேஷ் தக்வாலே தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். இந்த போட்டியில் மோர்னே மோர்கல் யோகேஷ் தக்வாலே-விற்கு 12 பந்துகளை வீசினார். இதில் 6 முறை பவுண்டரி லைனிற்கு பந்தை விளாசினார் தக்வாலே. மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வீசப்பட்ட 12 பந்தில் 7 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்தார் மோர்கல் .

இந்தப் போட்டியில் யோகேஷ் தக்வாலே 28 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் அதிரடி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸின் கேட்சை சிறப்பாக கிறிஸ் லின் பிடித்தார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

#4 இஷான் கிஷன் vs குல்தீப் யாதவ்

Kishan vs Kuldeep- 0, 6, 1, 6, 6, 6, 6
Kishan vs Kuldeep- 0, 6, 1, 6, 6, 6, 6

இந்நிகழ்வு கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது நடந்தது. டாஸ் இழந்த மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. இவின் லிவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 5.4வது ஓவரில் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது.

இரு தொடக்க ஆட்டக்காரர்களும் தங்களது விக்கெட்டை இழந்த பிறகு இஷான் கிஷன் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இஷான் கிஷன் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது கூட நேரம் அளிக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இஷான் கிஷன் பெரும்பாலும் தனது அதிரடியை இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் வெளிபடுத்தினார். இவர் வீசிய 7 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசினார் இஷான் கிஷன். மற்ற மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு 11 பந்துகளை வீசி 12 ரன்களை மட்டுமே அளித்தார் குல்தீப். இஷான் கிஷன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணி 210 என்ற இமாலயா டி20 இலக்கை நிர்ணயித்தது.

பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 108 ரன்களில் சுருண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil