#3 யோகேஷ் தக்வாலே vs மோர்னே மோர்கல்
இந்தியாவில் தேர்தல் காரணமாக 7வது ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதன் 11வது போட்டியில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஷார்ஜாவில் மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 31 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்.
சேஸிங்கில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பார்திவ் படேல் மற்றும் யோகேஷ் தக்வாலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 8 ஓவர்களில் 67 ரன்களை எடுத்தனர். இந்த போட்டியில் 29 வயதான திரிபுராவை சேர்ந்த யோகேஷ் தக்வாலே தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். இந்த போட்டியில் மோர்னே மோர்கல் யோகேஷ் தக்வாலே-விற்கு 12 பந்துகளை வீசினார். இதில் 6 முறை பவுண்டரி லைனிற்கு பந்தை விளாசினார் தக்வாலே. மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வீசப்பட்ட 12 பந்தில் 7 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்தார் மோர்கல் .
இந்தப் போட்டியில் யோகேஷ் தக்வாலே 28 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் அதிரடி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸின் கேட்சை சிறப்பாக கிறிஸ் லின் பிடித்தார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.