#4 இஷான் கிஷன் vs குல்தீப் யாதவ்
இந்நிகழ்வு கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட போது நடந்தது. டாஸ் இழந்த மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தது. இவின் லிவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 5.4வது ஓவரில் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது.
இரு தொடக்க ஆட்டக்காரர்களும் தங்களது விக்கெட்டை இழந்த பிறகு இஷான் கிஷன் 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இஷான் கிஷன் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது கூட நேரம் அளிக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இஷான் கிஷன் பெரும்பாலும் தனது அதிரடியை இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓவரில் வெளிபடுத்தினார். இவர் வீசிய 7 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசினார் இஷான் கிஷன். மற்ற மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு 11 பந்துகளை வீசி 12 ரன்களை மட்டுமே அளித்தார் குல்தீப். இஷான் கிஷன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் அணி 210 என்ற இமாலயா டி20 இலக்கை நிர்ணயித்தது.
பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 108 ரன்களில் சுருண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.